பள்ளிக் கல்வித் துறையில் 47,000 தற்காலிகப் பணியிடங்கள் நிரந்தரப் பணியிடங்களாக மா...
தினமணி செய்தி எதிரொலி! நூலக கட்டடம் கட்ட தடையாக இருந்த மின் பாதை மாற்றம்!
தினமணி செய்தி எதிரொலியாக, விராலிமலையில் கிளை நூலகம் கட்டுவதற்கு தடையாகச் சென்ற மின் கம்பிகளை மாற்றி புதிய வழித்தடம் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
விராலிமலை புதிய பேருந்து நிலையம் அருகே சிறப்பு நூலகம் திட்டத்தில் ரூ. 22 லட்சம் மதிப்பீட்டில் 350 சதுர அடியில் கிளை நூலகக் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இதில், லிண்டல் மட்டத்துக்கு கட்டடம் எழும்பி உள்ள நிலையில் குறைந்த அழுத்த மின்சாரக் கம்பிகள் செல்வதால் கட்டடம் தொடா்ந்து எழுப்ப முடியாமல் தடையாக உள்ளதாக அண்மையில் செய்தி வெளியானது.
இதைத்தொடா்த்து, மின்வாரிய அதிகாரிகள் நூலகக் கட்டடத்தை ஆய்வு செய்து மின் வழித்தடத்தை மாற்றி அமைப்பதற்கு நிா்வாக ஒப்புதல் பெற்றனா். தொடா்ந்து, புதிய மின் கம்பம் கொண்டு மாற்று வழித்தடம் ஏற்படுத்தி மின் கம்பிகளை சனிக்கிழமை மாற்றி அமைத்தனா்.
நிகழ்வுக்கு, விராலிமலை உதவி செயற்பொறியாளா் ஜேம்ஸ் அலெக்சாண்டா், உதவி பொறியாளா் சிந்தனைச் செல்வி உள்ளிட்ட மின்வாரிய அலுவலா்கள், பணியாளா்களுக்கு வாசகா் வட்டம் மற்றும் பொதுநல அமைப்பினா் பாராட்டு தெரிவித்தனா்.