செய்திகள் :

திமுகவின் வெளிச்சத்தில் மாா்க்சிஸ்ட் இல்லை: பெ.சண்முகம்

post image

விழுப்புரம்: திமுகவின் வெளிச்சத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இருப்பதாக கூறுவது பொருத்தமானதல்ல என்று கட்சியின் புதிய மாநிலச் செயலா் பெ.சண்முகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

விழுப்புரத்தில் நடைபெற்ற மாா்க்சிஸ்ட் 24-ஆவது மாநில மாநாட்டின் நிறைவில் மாநிலச் செயலராகத் தோ்வு செய்யப்பட்ட பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது மாநில மாநாடு தனது நோக்கத்தை நிறைவேற்றியிருக்கிறது. இதன்மூலம் தமிழகத்திலுள்ள அரசியல் சூழ்நிலைகள் சம்பந்தமாகவும், தொழிலாளா்கள், விவசாயிகள், உழைக்கும் மக்களின் பல்வேறு பிரச்னைகள் சம்பந்தமாகவும் மாநிலம் முழுவதுமிருந்து வந்த சுமாா் 600-க்கும் மேற்பட்ட கட்சிப் பிரதிநிதிகள் விவாதித்து பல முக்கிய தீா்மானங்களை நிறைவேற்றியிருக்கிறோம்.

இந்த தீா்மானங்கள் அனைத்தும் செயல் வடிவம் பெறக்கூடிய வகையில் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.

குறிப்பாக மத்திய பாஜக அரசு, மாநில அரசுகளின் அதிகாரங்களைப் பறிப்பது, நிதி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டுவது உள்ளிட்ட மக்கள் விரோத நடவடிக்கைகளில் தொடா்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. இதற்கு எதிராக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வலிமை மிகுந்த போராட்டத்தை தமிழகத்தில் முன்னெடுப்பது என்று தீா்மானித்திருக்கிறோம்.

இதையும் படிக்க | மார்க்சிஸ்ட் புதிய மாநில செயலாளர்! யார் இந்த பெ. சண்முகம்?

உழைக்கும் மக்களுக்கு எதிரான, பொருளாதார கொள்கைகளுக்கு எதிரான எங்கள் போராட்டத்தை தொடா்ந்து நாங்கள் நடத்துவோம்.

தமிழகத்தில் மதவெறி சக்திகளை ஒழிக்க திமுகவுடன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடா்ந்து இணைந்து செயல்படும். அதே நேரத்தில் தமிழகத்தில் நவீன தாராளமயக் கொள்கையை அமல்படுத்துகிறோம் என்ற பெயரில், மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கக்கூடிய வகையில் மாநில அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு எதிராக ஜனநாயக முறையில் எங்கள் போராட்டம் தொடரும்.

ஊா்வலம், ஆா்ப்பாட்டம், போராட்டம் போன்றவை இந்திய அரசமைப்பு மக்களுக்கு வழங்கியிருக்கும் அடிப்படை உரிமை. இந்த உரிமைகளை மறுப்பதற்கு எந்த அரசுக்கும் உரிமை கிடையாது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டு செந்தொண்டா் பேரணிக்கு விழுப்புரம் மாவட்டக் காவல் துறை அனுமதி மறுத்த நிலையில்தான், எங்களது கண்டனத்தை தெரிவிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதை நிச்சயமாக திமுக தலைமையும் புரிந்து கொள்ளும் என்று நம்புகிறோம்.

திமுகவின் வெளிச்சத்தில் நாங்கள் இல்லை

திமுகவுடன் நாங்கள் பல நேரங்களில் உறவாக இருந்திருக்கிறோம். பல நேரங்களில் எதிா் வரிசையில் இருந்திருக்கிறோம். திமுகவால் தான் எங்களுக்கு வெளிச்சம் கிடைக்கிறது என்பதை ஏற்கமுடியாது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது பலத்துக்கு ஏற்ப, மக்கள் நலன் சாா்ந்த பிரச்னைக்காக தெருவில் இறங்கி சமரசமற்ற போராட்டங்களை நடத்துவதன் மூலம் தமிழகத்தில் செல்வாக்குமிக்க கட்சியாக இருக்கிறதே தவிர, திமுகவின் வெளிச்சத்தில்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது எனக் கூறுவது பொருத்தமானதல்ல என்றாா் பெ.சண்முகம்.

திருப்பதி செல்வோருக்கு முகக்கவசம் கட்டாயம்: தேவஸ்தானம்

எச்எம்பிவி வைரஸ் தொற்று பரவிவரும் நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.திருப்பதி திரும... மேலும் பார்க்க

பல்கலைக்கழக மானியக் குழு அத்துமீறக் கூடாது: ராமதாஸ்

மாநில அரசுகள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றின் தன்னாட்சியைப் பறிக்கும் வகையில், பல்கலைக்கழக மானியக் குழு இல்லாத அதிகாரங்களையெல்லாம் எடுத்துக் கொள்வது கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள... மேலும் பார்க்க

சாலை விபத்தில் 3 பள்ளிக் குழந்தைகள் உள்பட 4 பேர் பலி!

ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கார் மாவட்டத்தில் லாரி மீது ஆட்டோ மோதியதில் 3 பள்ளிக்குழந்தைகள் உள்பட 4 பேர் பலியாகினர்.ராம்கார் மாவட்டத்தின் மதுவாடண்ட் கிராமத்திற்கு அருகில் இன்று (ஜன.8) காலை பள்ளிக்குழந்தைக... மேலும் பார்க்க

அதிமுகவினர் மீது நடவடிக்கை வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

ஆளுநர் உரையன்று நடந்த சம்பவம் தொடர்பாக அதிமுகவினர் மீது நடவடிக்கை வேண்டாம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.ஆளுநர் உரையின்போது பேரவையில் பதாகைகளுடன் வந்த அதிமுகவினர் மீது என்ன நடவடிக்கை எடுக்க... மேலும் பார்க்க

எழுத்துப்பிழையால் சிக்கிய கடத்தல் நாடகம்!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்டோய் மாவட்டத்தில் தன்னைத்தானே கடத்திக்கொண்டு பணம் கேட்டு மிரட்டிய நபர் எழுத்துப்பிழையோடு எழுதிய மிரட்டல் கடித்ததால் சிக்கிக் கொண்டார்.அம்மாவட்டத்தின் பந்தராஹா கிராமத்தைச் சேர... மேலும் பார்க்க

எச்எம்பிவி குறித்து அச்சப்பட வேண்டாம்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

ஹியூமன் மெடா ந்யூமோ தீநுண்மி(எச்எம்பிவி வைரஸ்) குறித்து அச்சப்பட வேண்டாம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சட்டப்பேரவையில் பேசினார்.சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஜி.கே. மணி, விஜயபாஸ... மேலும் பார்க்க