செய்திகள் :

திமுக அரசின் சாயம் வெளுக்கிறது: தவெக விமர்சனம்!

post image

மதநல்லிணக்கம் தொடர்பான திமுக அரசின் சாயம் வெளுப்பதாக தமிழக வெற்றிக் கழகம் விமர்சித்துள்ளது.

மதுரையில் மதநல்லிணக்கப் பேரணிக்கு திமுக அரசு அனுமதி மறுத்தது குறித்து தவெக கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ராஜ்மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது.

"அறவழிப் போராட்டம் என்பது அரசியல் அடையாளங்களில் ஒன்று. அதுவும் மதநல்லிணக்கம் பேண வலியுறுத்தும் பேரணியை எந்தக் கட்சி அல்லது அமைப்பு நடத்தினாலும், அது கட்டாயம் அனுமதிக்கப்பட வேண்டிய ஒன்று.

மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பின் சார்பில் மத நல்லிணக்கப் பேரணியை மதுரையில் நடத்த அக்கூட்டமைப்பினர் அனுமதி கேட்டும் ஆளும் தி.மு.க. அரசு அனுமதி மறுத்திருக்கிறது. இதை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல், திருமாவளவன் நேற்று மதுரையில் நடைபெற்ற அக்கூட்டமைப்பின் நிகழ்ச்சியில் விரக்தியோடு பேசி உள்ளார். மதநல்லிணக்கப் பேரணி நடத்த அனுமதி மறுத்தது என்பது, மதநல்லிணக்கம் தொடர்பாக இரட்டை வேடம் போடும் தி.மு.க.வின் கபட நாடகத்தை தோலுரித்துக் காட்டுகிறது. நல்லிணக்கப் பேரணிக்கு அனுமதி மறுப்பது எந்த வகையில் நியாயம் என்பது தி.மு.க. அரசுக்கே வெளிச்சம்.

மத நல்லிணக்கப் பேரணிக்கு அனுமதி மறுக்கப்படும். ஆனால், பிளவுவாத அரசியல் செய்பவர்களுக்கு மட்டும் அனைத்து அனுமதியும் அளிப்பது என்பது இந்த தி.மு.க. அரசு தன் மறைமுகக் கூட்டணியை உறுதி செய்வதைத்தானே காட்டுகிறது.

இதையும் படிக்க | "மும்மொழிக் கொள்கையை ஏற்பதாக திமுக எம்.பிக்கள் ஒருபோதும் கூறியதில்லை!" - கனிமொழி

வாய்வித்தையில் மட்டும் தமிழ்நாடு உரிமைகள், மதச்சார்பின்மை என்று கபடநாடகம் ஆடும் இந்த தி.மு.க. அரசால் பா.ஜ.க. மீதானத் தன்னுடைய மறைமுகப் பாசத்தை வெளிப்படுத்தாமல் இருக்க இயலவில்லை. பூனைக்குட்டி வெளியே வரத்தான் செய்கிறது. தி.மு.க.வும் பா.ஜ.கவும் 'எல்லாமுறையிலும் மறைமுகக் கேளிர்' என்பது இதுபோன்ற செயல்களால் உறுதியாகவும் செய்கிறது.

கொஞ்சம் கொஞ்சமாக இந்த தி.மு.க. அரசின் சாயம் வெளுக்கத் தொடங்கி உள்ளது. இதை அவர்களின் கூட்டணிக் கட்சியினர் மட்டுமன்று தமிழக மக்களும் உணர்ந்தே வருகின்றனர். எல்லாவற்றிற்கும் சேர்த்து, 2026-ல் ஒரு நல்ல முடிவு எங்கள் கழகத் தலைவர் தலைமையிலான நல்லரசு வாயிலாக கிடைக்கத்தான் போகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

கூட்டணி வியூகமா? வைத்திலிங்கத்துடன் சசிகலா, தினகரன், திவாகரன் சந்திப்பு!

ஓ.பன்னீர் செல்வம் அணியின் ஆதரவாளர் வைத்திலிங்கத்தை சசிகலா மற்றும் அவரின் சகோதரர் திவாகரன் மற்றும் டி.டி.வி. தினகரன் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.ஒரத்தநாட்டில் வைத்திலிங்கத்தின் உடல்நிலை குறித்து விசாரி... மேலும் பார்க்க

திருத்தணி மார்க்கெட்டுக்கு காமராசர் பெயர்: தமிழக அரசு அறிவிப்பு!

திருத்தணி நகராட்சியில் ரூ.3.02 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய மார்க்கெட் கட்டடத்திற்கு "பெருந்தலைவர் காமராசர் நாளங்காடி" எனப் பெயரிட தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்ச... மேலும் பார்க்க

எரிவாயு சிலிண்டருக்கு ரூ. 500, இளைஞர்களுக்கு ரூ. 5000: பாமக நிழல் பட்ஜெட்!

சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ. 500 மானியம், படித்துவிட்டு 5 ஆண்டுகளுக்கு மேலாக வேலையில்லாமல் தவிக்கும் இளைஞர்களுக்கு ரூ. 5000 உதவித்தொகை என பாமகவின் நிழல் பட்ஜெட்டில் முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ள... மேலும் பார்க்க

ஒருநாள் தொப்பி அணிந்து வேடம் போடுபவன் நானல்ல: சீமான்

ஒருநாள் தொப்பி அணிந்து வேடம் போடுபவன் நானல்ல என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.திமுகவுக்கான எதிரான வாக்குகளை ஒன்றிணைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி பேசியிருப்பது ... மேலும் பார்க்க

தர்மேந்திர பிரதானுக்கு எதிராக திமுகவினர் போராட்டம்!

திமுக எம்.பி.க்கள் பற்றி தவறாகப் பேசிய மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதனுக்கு எதிராக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொட... மேலும் பார்க்க

யார் அந்த சூப்பர் முதல்வர்?

சூப்பர் முதல்வரின் பேச்சைக் கேட்டு தேசிய கல்விக் கொள்கையில் தமிழக அரசு கையெழுத்திடவில்லை என்று மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மக்களவையில் பேசியிருப்பது விவாவதப் பொருளாகியுள்ளது.தேசிய ... மேலும் பார்க்க