செய்திகள் :

"திமுக அரசின் நில எடுப்புப் பணிகளால் தமிழகமே போராட்ட களமாகியுள்ளது" - ஆர்.பி. உதயகுமார் சொல்வதென்ன?

post image

திமுக அரசின் நில எடுப்புப் பணியால் தமிழகமே போராட்ட களமாக மாறியுள்ளது என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சாலைப் பணிகள் என்றாலும், புதிய கட்டடங்கள் என்றாலும் வளர்ச்சி திட்டங்கள் என்றாலும் மக்களுக்கான திட்டங்களைச் செயல்படுத்தும்போது தனியார் நிலங்களை அரசு சரியாகக் கையகப்படுத்துகிறதா என்ற கேள்வி எழுகிறது.

மக்கள் போராட்டம்

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க 2500 ஏக்கருக்கும் அதிகமாக நிலத்தை மக்களின் ஒத்துழைப்போடு கையகப்படுத்தி வழங்கினார். மக்களுக்கான திட்டங்களை அறிவித்த அடுத்த நாளே, அதற்கான நிலத்தை ஒப்படைக்கிற பணியை மிகச் சிறப்பாகச் செயல்படுத்தினார்.

11 புதிய மருத்துவக் கல்லூரிக்கான இடம் தேர்வு செய்வதிலும், 6 புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கான இடங்களைத் தேர்வு செய்வதிலும், அப்பகுதி மக்களின் ஒத்துழைப்போடு செய்தார். ஆனால், சென்னை பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக 9 முறை தீர்மானம் நிறைவேற்றிய ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் திவ்யா தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

மதுரை மாவட்டம் சின்ன உடைப்பு கிராமத்தில் விமான நிலையத்துக்கு நிலம் வழங்கிய பாதிக்கப்பட்ட மக்கள் உரிய நிவாரணம் கேட்டுப் போராடி வருகிறார்கள். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது விமான நிலைய விரிவாக்கத்திற்கு இந்த நிலங்களைக் கையகப்படுத்தாமல் அண்டர் பாஸ் மூலம் விமான ஓடுதளத்தை விரிவாக்கம் செய்யும் முன்மாதிரி திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசின் அனுமதியைப் பெற்று மாநில அரசு மூலம் அரசாணை வெளியிட்டார். எடப்பாடியார் கொண்டு வந்த திட்டம் என்பதால், தி.மு.க அரசு அதை மறுத்துக் கைவிடப்பட்ட திட்டத்தைச் செயல்படுத்த உள்ளது.

தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்தபோது எட்டு வழிச்சாலை போன்ற பல திட்டங்களுக்கு நில எடுப்பு பணியின்போது அரசுக்கு எதிராகப் பல போராட்டங்களைத் தூண்டிவிட்டார்கள். அதற்கு உரிய விளக்கத்தை மக்களிடத்தில் சொல்லி 11 மருத்துவக் கல்லூரிகள், குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம், 6 புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மக்களுக்கும், விவசாயிகளுக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் எடப்பாடி பழனிசாமி அமைத்துக் கொடுத்தார்

ஆர்.பி. உதயகுமார்

தற்போது தி.மு.க அரசில் நில எடுப்புப் பணியால் தமிழகமே போராட்ட களமாக மாறியுள்ளது. மதுரை முல்லை நகர்ப் பகுதியில் நிலம் தொடர்பாக மக்கள் போராட்டம் நடத்தி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்கள்.

தி.மு.க அரசு மக்களை இன்று வீதியில் நிறுத்தி இருக்கிறது. இதற்கு உரிய பதிலை, உரிய பாடத்தை வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் ஸ்டாலினுக்குப் புகட்டுவார்கள். மக்கள், தங்களுக்கு ஆதரவாக, ஒரே நம்பிக்கையாக, எடப்பாடி பழனிசாமி இருக்கிறார் என நினைக்கிறார்கள். மக்களின் நம்பிக்கை நிறைவேறுகிற காலம் வெகு தொலைவில் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/TATAStoryepi01

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

`ஆட்சி அதிகாரம்; முதல் புள்ளியை வைத்துள்ளோம்... பல புள்ளிகள் தேவை' - திருமாவளவன் சொல்வதென்ன?

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வந்திருந்தார். முன்னதாக பழனி முருகன் கோயிலுக்கு சென்று திருமாவளவன் சாமி தரிசனம் செய்... மேலும் பார்க்க

Adani: 'குற்றம் நிரூபிக்கப்படும் வரை நாங்கள் நிரபராதிகளே!' - அதானி குழுமத்தின் அறிக்கை கூறுவதென்ன?!

'இது அடிப்படையற்ற குற்றசாட்டு' என்று அதானி மீதான அமெரிக்காவின் ஊழல் குற்றச்சாட்டிற்கு அதானி நிறுவனம் பதிலளித்துள்ளது. அதானி நிறுவனம் தனது அறிக்கையில், "அமெரிக்க நீதித்துறை மற்றும் அமெரிக்க பத்திரங்கள்... மேலும் பார்க்க

இந்திய அதிகாரிகளுக்கு ரூ.2,200 கோடி லஞ்சம் - அமெரிக்காவில் அதானி மீது முறைகேடு புகார் | முழு பின்னணி

சோலார் எனர்ஜி திட்ட ஒப்பந்த விவகாரத்தில் முதலீட்டைப் பெற அமெரிக்க முதலீட்டாளர்களை பொய் சொல்லி ஏமாற்றியதாகவும், அதற்காக இந்திய அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்ததாகவும் கௌதம் அதானி மீது பரபரப... மேலும் பார்க்க

Adani : 'அதானியும் மோடியும் கூட்டு... அதானியை கைதுசெய்ய வேண்டும்' - ராகுல் காந்தி கூறுவது என்ன?!

'சோலார் ஒப்பந்தத்திற்காக அதானி இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்துள்ளார்... போலி அறிக்கைகள் மூலம் அமெரிக்கா மற்றும் உலக முதலீட்டாளர்களிடமிருந்து அதானி நிதி பெற்றுள்ளார்' என்று அமெரிக்கா அதானியின் மீ... மேலும் பார்க்க

``திமுக-வில் போதைப்பொருள் கடத்தலுக்கு எனத் தனியாக ஒரு அணியை வைத்துவிடலாம்" - ஹெச்.ராஜா காட்டம்

"கட்சியின் ஒருங்கிணைப்புக் குழு தலைவராக என்ன சாதித்தீர்கள்?. கட்சி சைலன்ட் மோடில் இருப்பதாக விமர்சனம் கிளம்பியிருக்கிறதே?""மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டேன். பெரிய அளவில் உறுப்பினர்களை இணைத... மேலும் பார்க்க

உதயநிதி விழா குழப்பம்; தவிக்கும் அமைச்சர் டு `தங்கை’ தலைவி; கொதித்த `கதைசொல்லி’ தலைவர் | கழுகார்

அட்வைஸ் செய்த கார்கே!தி.மு.க - காங்கிரஸ் உறவு...மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்துக்காக, தமிழர்கள் வாழும் பகுதிகளில் பிரசாரம் செய்யச் சென்றிருந்தார் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை. கூட... மேலும் பார்க்க