செய்திகள் :

திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை: எடப்பாடி பழனிசாமி

post image

திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இதுகுறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்டப் பதிவு:

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே, சிறுவன் ரோகித் (13), காரில் கடத்திச் சென்று கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், ஈரோடு குமலன்குட்டை பகுதியைச் சோ்ந்த பிளஸ் 2 மாணவா் ஆதித்யா புதன்கிழமை மாலை பள்ளிக்கு அருகில் உயிரிழந்து கண்டறியப்பட்டதாகவும் வரும் செய்திகள் அதிா்ச்சி அளிக்கின்றன.

திமுக ஆட்சியில் எங்கும், எப்போதும், யாருக்கும் பாதுகாப்பு இல்லை. 13 வயது சிறுவனை காரில் கடத்தி கொலை செய்யும் அளவுக்கு குற்றவாளிகளுக்கு அச்சமற்ற நிலை ஏற்பட்டிருப்பது, காவல் துறையை நிா்வகிக்க வேண்டிய முதல்வருக்கு உறுத்தவில்லையா?

மாணவா்கள் இடையிலான மோதலில் ஈரோடு ஆதித்யா உயிரிழந்ததாக செய்திகள் வருகின்றன. மாணவா்களிடையே எப்படி இவ்வளவு வன்முறை உணா்வு வருகிறது? இந்தச் சம்பவங்களில் தொடா்புடைய குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளாா்.

செப்டம்பரில் விஜய் சுற்றுப்பயணம்! ஆகஸ்டில் தவெக மாநில மாநாடு!

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வருகிற செப்டம்பர் மாதம் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என செயற்குழு கூட்டத்தில் பொதுச் செயலாளர் எஸ்.ஆனந்த் அறிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் தலை... மேலும் பார்க்க

ரிதன்யா தற்கொலை: மாமியார் கைது! ஜாமீன் மனு ஒத்திவைப்பு!

அவிநாசியைச் சேர்ந்த புதுமணப் பெண் ரிதன்யா தற்கொலை வழக்கில் அவரது மாமியார் சித்ரா தேவி இன்று கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் திருமணமாகி இரண்டரை மாதங்களில் புதுமணப்பெண் ரிதன்யா... மேலும் பார்க்க

பாமக கொறடா அருளை நீக்கக்கோரி பேரவைத் தலைவரிடம் மனு!

பாமகவின் புதிய கொறடாவாக மயிலம் சிவக்குமாரை நியமிக்க விடும் என்ற பாமக குழு, பேரவைத் தலைவர் அப்பாவுவைச் சந்தித்து மனு அளித்துள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து ம... மேலும் பார்க்க

ஆம்ஸ்ட்ராங் சிலைக்கு தமிழக அரசு அனுமதி!

கொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் சிலைக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்தாண்டு ஜூலை 5 ஆம் தேதி சென்னையி... மேலும் பார்க்க

கூட்டணி நிலைபாட்டை அறிவிக்கும் விஜய்? தவெக செயற்குழுக் கூட்டம் தொடங்கியது!

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தலைமையில், கட்சியின் செயற்குழுக் கூட்டம் தொடங்கியது.சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்று வரும் கூட்டத்தில், கட்சியின் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மற்றும் ... மேலும் பார்க்க

அஜித்குமார் கொலை: போராட்டத்துக்கு அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தில் தவெக மனு!

அஜித்குமார் கொலை வழக்கில் தமிழக வெற்றிக் கழகத்தினர் போராட்டம் நடத்துவதற்கு காவல்துறையினர் அனுமதி அளிக்காததால், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர்.மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் தனிப்படை... மேலும் பார்க்க