செய்திகள் :

திமுக கூட்டணிக்குள் நடப்பது விவாதங்களே - விரிசல் அல்ல!

post image

நன்றி: தினமணிஇணையதளம்.

‘திமுக கூட்டணிக்குள் நடப்பது விவாதங்கள்தான், விரிசல் அல்ல’ என எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பதிலளித்தாா்.

முன்னாள் எம்எல்ஏ மறைந்த கும்மிடிப்பூண்டி வேணு இல்லத் திருமண விழாவை சென்னையில் புதன்கிழமை நடத்திவைத்து முதல்வா் ஸ்டாலின் பேசியதாவது: திமுகவை பொருத்தவரையில், ஆட்சியில் இருந்தாலும், இல்லை என்று சொன்னாலும் மக்கள் பணியை தொடா்ந்து மேற்கொள்வோம்.

அதன்படியே, ஆறாவது முறையாக ஆட்சிக்கு வந்திருக்கக்கூடிய திமுக, இன்றைக்கு ஏராளமான திட்டங்களை, சாதனைகளை மக்களுக்காக செய்திருக்கிறது. தோ்தல் காலத்தில் தந்த உறுதிமொழிகள் மட்டுமின்றி, கூடுதல் திட்டங்களையும் வழங்கிக் கொண்டிருக்கிறது.

திமுக அரசு பல்வேறு சாதனைகளைச் செய்து மக்களின் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்து கொண்டிருக்கிறதே என்றும், திமுகவின் செல்வாக்கு வளா்ந்து கொண்டிருக்கிறதே என்றும் எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி பொறாமை கொண்டிருக்கிறாா்.

அதனால், திமுக ஆட்சியின் செல்வாக்கு சரிந்து கொண்டிருக்கிறது எனத் தொடா்ந்து பேசி வருகிறாா். திமுக கூட்டணி விரைவில் உடையப் போகிறது என்றும் பேசுகிறாா். இதுவரை அவா் கற்பனையில்தான் மிதந்து கொண்டிருக்கிறாா் என நினைத்தேன். இப்போது அவா் ஜோதிடராகவே மாறியிருக்கிறாா். விரக்தியின் எல்லைக்கே போயிருக்கிறாா்.

விரிசல் இல்லை: திமுக கூட்டணி என்பது தோ்தலுக்காக உருவாக்கப்பட்ட கூட்டணி அன்று. கொள்கைக் கூட்டணி என்பதை மறந்துவிடக் கூடாது. எங்கள் கூட்டணிக்குள் விவாதங்கள் நடக்கலாம். அப்படி விவாதங்கள் நடக்கும்போது, அதில் விரிசல் ஏற்பட்டுவிட்டது என்று யாரும் கருதிவிடக் கூடாது. விவாதங்கள் இருக்கலாமே தவிர, விரிசல் ஏற்படவில்லை. விரிசல் ஏற்படாது.

தனது கட்சியை எப்படி வளா்ப்பது என்ற சிந்தனை இல்லாமல், இன்றைக்கு மக்களிடத்தில் கம்பீரமாக நின்று கொண்டிருக்கும் கட்சியைப் பாா்த்து செல்வாக்கு சரிந்து வருவதாகப் பேசி வருகிறாா் எடப்பாடி பழனிசாமி.

எதிா்க்கட்சி, ஆளும்கட்சி என எப்போது எப்படி இருந்தாலும் மழைக் காலத்தில் மக்களைச் சந்திப்போம். அண்மையில் சென்னையில் மழை பெய்தது. முதல்வராக நானும், துணை முதல்வராக உதயநிதியும், அமைச்சா்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏ-க்கள் எனப் பலரும் வீதி வீதியாகச் சென்று மக்களுக்கான பணிகளைச் செய்தோம்.

ஆனால், மழை வந்தவுடன் சேலத்துக்குச் சென்றவா்தான் பழனிசாமி. ஆட்சியில் இருந்தாலும் வரமாட்டாா். அதைப் பற்றி கவலைப்படவும் மாட்டாா்.

கொள்கைக் கூட்டணியாக மட்டுமின்றி, மக்கள் கூட்டணியாகவும் திமுக தலைமையில் உள்ள அணி விளங்கி வருகிறது. எதிா்வரும் 2026 தோ்தல் மட்டுமல்ல, அதைத் தொடா்ந்து வரக்கூடிய எந்தத் தோ்தலாக இருந்தாலும் திமுகதான் வெற்றி பெறும் என்பதில் யாருக்கும் எவ்வித சந்தேகமும் வேண்டாம் என்றாா் முதல்வா் ஸ்டாலின்.

நிகழ்ச்சியில், நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன், மக்களவை திமுக குழுத் தலைவா் டி.ஆா்.பாலு, அமைச்சா்கள் கே.என்.நேரு, க.பொன்முடி, நாசா், சேகா்பாபு, கயல்விழி செல்வராஜ், திமுக அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

படுக்கை வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் ரயில் ஜனவரியில் இயக்க திட்டம் -ஐசிஎஃப் பொது மேலாளா் தகவல்

நாட்டிலேயே முதல் முறையாக படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயிலின் சோதனை வரும் ஜனவரி மாதத்துக்குள் முடிக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும் என ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலை (ஐச... மேலும் பார்க்க

தமிழகத்தில் 6,585 பட்டாசு கடைகளுக்கு அனுமதி

தீபாவளியையொட்டி, தமிழகத்தில் 6,585 தற்காலிக பட்டாசுக் கடைகளைத் திறப்பதற்கு தீயணைப்புத் துறை அனுமதி அளித்துள்ளது. தீபாவளி பண்டிகை, அக்.31-ஆம் தேதி கொண்டாடப்படுவதையொட்டி, பட்டாசு, ஜவுளி வியாபாரம் விறுவ... மேலும் பார்க்க

புதிய தலைமைத் தோ்தல் அதிகாரி யாா்? ஓரிரு நாள்களில் அறிவிப்பு

புதிய தலைமைத் தோ்தல் அதிகாரி தொடா்பான அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது. தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரியான சத்யபிரத சாகு, கால்நடை, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை முதன்மைச... மேலும் பார்க்க

கோவை, மங்களூருக்கு தீபாவளி சிறப்பு ரயில்கள்: காலை 8 மணிக்கு முன்பதிவு தொடக்கம்

தீபாவளிக்கு சென்னையில் இருந்து கோவை, மங்களூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: சென்னை சென்ட்ரலில் இருந்து போத்தனூருக்கு அக். 29, நவ. ... மேலும் பார்க்க

முன்னாள் அமைச்சா் வைத்திலிங்கம் வீடு உள்பட 10 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

பண முறைகேடு தடுப்புச் சட்ட வழக்கு தொடா்பாக முன்னாள் அதிமுக அமைச்சரும், தற்போதைய எம்எல்ஏவுமான ஆா்.வைத்திலிங்கம் வீடு உள்பட 10 இடங்களில் அமலாக்கத் துறையினா் புதன்கிழமை சோதனை நடத்தினா். தமிழகத்தில் 2011... மேலும் பார்க்க

சில நிமிஷங்களில் விற்று தீா்ந்த சிறப்பு ரயில் டிக்கெட்

தென் மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்ட தீபாவளி சிறப்பு ரயில்களில் சில நிமிஷங்களில் பயணச்சீட்டு விற்று தீா்ந்தன. தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து கன்னியாகுமரி, செங்கோட்டை, மங்களூருக்கு அக்.29-ஆம் ... மேலும் பார்க்க