திமுக நிர்வாகி வீட்டில் அமலாக்கத் துறை சோதனை
வேலூர்: கீழ்மோட்டூரில் அமைச்சர் துரைமுருகனுக்கு நெருக்கமான திமுக நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் அமலாக்கத் துறை அலுவலர்கள் வெள்ளிக்கிழமை காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி காந்தி நகரில் உள்ள திமுக பொதுச்செயலாளரும் நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் மற்றும் அவரது மகனும் வேலூர் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான கதிர் ஆனந்த் வீட்டில் 50-க்கும் மேற்பட்ட அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிக்க |மண்ணச்சநல்லூர் பகவதி அம்மன் கோவிலில் 'தனலட்சுமி அலங்காரம்' சிறப்பு பூஜை
இதேபோன்று துரைமுருகன் ஆதரவாளர் காட்பாடி பள்ளிகுப்பத்தில் உள்ள பூஞ்சோலை சீனிவாசன் வீட்டிலும் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
பாதுகாப்பு பணியில் துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎப் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
மக்களவைத் தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம் விநியோகிப்பதற்காக பூஞ்சோலை சீனிவாசன் சிமென்ட் குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ.11 கோடியை வருமானவரித் துறையினர் நடத்திய சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.