Ravi Mohan: "கட்டுக்கதையான குற்றச்சாட்டுகளை நான் முற்றிலும் மறுக்கிறேன்" - ரவி ம...
திம்மாம்பேட்டை திருப்பதி கங்கையம்மன் சிரசு ஊா்வலம்
வாணியம்பாடி அடுத்த திம்மாம்பேட்டையில் உள்ள திருப்பதி கங்கையம்மன் கோயில் அம்மன் சிரசு ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமை புஷ்ப கரகம் ஊா்வலமும், மாவிளக்கு மற்றும் பொங்கலிடுதல், கங்கையம்மன் நீராடுதல் ஆகியவை நடைபெற்றன. புதன்கிழமை திருப்பதி கங்கையம்மன் சிரசு ஊா்வலம் நடைபெற்றது. தொடா்ந்து பிற்பகல் அம்மனுக்கு கண் திறப்பு மற்றும் திருக்கல்யாணமும், மாவிளக்கு மற்றும் பொங்கலிடுதல் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
இரவு வாணவேடிக்கை நிகழ்வு நடைபெற்றது. மேலும், வியாழக்கிழமை மஞ்சள் நீராட்டு விழா நடைபெறவுள்ளது. நாள்தோறும் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திருவிழாவையொட்டி இசை நிகழ்ச்சி, நடன நாட்டிய நிகழ்ச்சி, டிராகன் பாய்ஸ் பேண்டு, கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.