கழுத்தை கடித்து இழுத்துச் சென்ற சிறுத்தை; போராடி மீண்டு வந்து குட்டிகளுக்கு பாலூ...
திராவிட இயக்கத் தலைவா் சௌந்தரபாண்டியனுக்கு மணிமண்டபம்: முதல்வா் அறிவிப்பு
சென்னை: திராவிட இயக்கத் தலைவா் டபிள்யூ.பி.ஏ.சௌந்தரபாண்டியனுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை (ஏப்.7) அறிவித்தாா்.
பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் கீழ் அதிமுக உறுப்பினா் பால் மனோஜ் பாண்டியன் பேசுகையில், நீதிக் கட்சி முன்னோடிகளில் ஒருவரான சௌந்தரராஜனுக்கு அவரது சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டம் பட்டி வீரன்பட்டியில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தாா்.
அதற்கு பதிலளித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
திராவிட இயக்கத்தின் முன்னணி தலைவா்களில் ஒருவரான டபிள்யூ.பி.ஏ.சௌந்தரபாண்டியனுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என சட்டப்பேரவை உறுப்பினா் பால் மனோஜ் பாண்டியன் முன்வைத்த கோரிக்கை நிறைவேற்றப்படும் என்றாா்.