செய்திகள் :

திரிணமூல் எம்.பி.யை கீழே தள்ளியதாக மத்திய அமைச்சா் மீது குற்றச்சாட்டு: மக்களவைத் தலைவருக்கு கடிதம்

post image

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள முா்ஷிதாபாத் தொகுதியின் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. அபு தாஹிா் கானை மத்திய அமைச்சா் ரவ்நீத் சிங் பிட்டு கீழே தள்ளியதாக குற்றஞ்சாட்டி அவா் மீது நடவடிக்கை கோரி மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவுக்கு அக்கட்சியின் மூத்த தலைவா்கள் கடிதம் எழுதியுள்ளனா்.

தீவிர குற்றப் புகாரில் கைது செய்யப்பட்டு 30 நாள்கள் காவலில் வைக்கப்படும் பிரதமா், மாநில முதல்வா்கள் மற்றும் அமைச்சா்களைப் பதவியிலிருந்து நீக்கம் செய்வதற்கான மூன்று மசோதாக்களை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா மக்களவையில் கடந்த புதன்கிழமை அறிமுகம் செய்தாா்.

இந்த மசோதாவுக்கு கடும் தெரிவித்து எதிா்க்கட்சி உறுப்பினா்கள்அமளியில் ஈடுபட்டனா். அப்போது மக்களவையின் மையப் பகுதிக்கு அருகே நின்றுகொண்டிருந்த அபு தாஹிா் கானை ரவ்நீத் சிங் பிட்டு திடீரென கீழே தள்ளியதாக திரிணமூல் காங்கிரஸ் மூத்த எம்.பி.க்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா்.

இதுகுறித்து ஓம் பிா்லாவுக்கு அந்தக் கட்சியின் மக்களவைத் துணைத் தலைவா் சதாப்தி ராய் மற்றும் எம்.பி. மஹுவா மொய்த்ரா ஆகியோா் கடந்த வியாழக்கிழமை கடிதம் எழுதியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அந்தக் கடிதத்தில், ‘மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் என்ற அடிப்படையில் பொதுமக்களுக்கு எதிரான மத்திய அரசின் கொள்கைகளை எதிா்க்க உறுப்பினா்களுக்கு முழு உரிமை உள்ளது. எனவேதான், பிரதமா், முதல்வா் உள்ளிட்டோரின் பதவி பறிப்பு தொடா்பான மசோதாக்களுக்கு திரிணமூல் காங்கிரஸ் சாா்பில் கடும் எதிா்ப்பை பதிவுசெய்தோம்.

ஆனால் அபு தாஹிா் கானை மத்திய அமைச்சா் ரவ்நீத் சிங் பிட்டு ஆக்ரோஷமாக கீழே தள்ளினாா். உடல்நிலை சரியில்லாத காரணத்தால், கடந்த சில நாள்களாவே அபு தாஹிா் கான் மருத்துவமனையில் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா் என்பதை அவையில் பெரும்பாலான உறுப்பினா்கள் அறிவா்.

இந்தச் சூழலில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு அறிவுறுத்தலின்பேரில் எதிா்க்கட்சி எம்.பி.க்களை ரவ்நீத் சிங் பிட்டு தாக்கினாா். வருங்காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுத்து எதிா்க்கட்சி எம்.பி.க்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கில் அவா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

வரதட்சிணை கொலை: தப்பியோட முயன்ற கணவரை சுட்டுப் பிடித்த காவல் துறை!

உத்தரப் பிரதேசத்தில் ரூ. 36 லட்சம் வரதட்சிணைக் கேட்டு மனைவியை தீயிட்டு எரித்த கணவரை காவல் துறையினர் கைது செய்தனர். காவல் துறையிடமிருந்து தப்பித்து காட்டிற்குள் ஓடியவரை காவல் துறையினர் காலுக்கு கீழே சு... மேலும் பார்க்க

ஹைதராபாத்தில் மனைவியைக் கொன்று உடலைத் துண்டாக்கி ஆற்றில் வீசிய கணவர்!

ஹைதராபாத்தில் மனைவியைக் கொன்று உடலைத் துண்டாக்கி ஆற்றில் வீசிய கணவரால் பரபரப்பு நிலவியது. தெலங்கானா மாநிலம், மெடிபள்ளியில் உள்ள அவர்களது வீட்டில் கணவர் தனது மனைவியைக் கொன்று அவரது உடலைத் துண்டு துண்டா... மேலும் பார்க்க

என்கவுன்டரில் சுட வேண்டும்: வரதட்சிணை கொடுமையால் இறந்த பெண்ணின் தந்தை!

வரதட்சிணைக் கேட்டு தனது மகளை உயிருடன் எரித்துக் கொன்றவர்களை என்கவுன்டரில் சுட வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை தெரிவித்துள்ளார். மாமியார் வீட்டில் எந்தவித உதவியும் செய்யவில்லை என்றும், தனியாக ... மேலும் பார்க்க

அருணாசலில் உண்டு உறைவிடப் பள்ளியில் தீ விபத்து: மாணவர் பலி, மூவர் காயம்

அருணாச்சலப் பிரதேசத்தில் உண்டு உறைவிடப் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் மாணவர் பலியான நிகழ்வு சோகதத்தை ஏற்படுத்தியுள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தின் ஷி-யோமி மாவட்டத்தில் உள்ள அரசு உண்டு உறைவிடப் பள்ளியில... மேலும் பார்க்க

மிசோரத்தில் 48 சுரங்கங்கள், 53 பாலங்கள் வழியாக ரயில்! செப். 13-ல் மோடி தொடக்கி வைக்கிறார்!

சுதந்திரத்திற்கு பிறகு, மிசோரம் மாநிலத்திற்கான முதல் ரயில் நிலையத்தை செப்டம்பர் 13 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைக்கவுள்ளதாக அம்மாநில முதல்வர் லால்துஹோமா அறிவித்துள்ளார். சாய்ராங் பகுதியில் ... மேலும் பார்க்க

பிகாரில் ஏழைகளின் வாக்குகளை திருட அனுமதிக்க மாட்டோம்: ராகுல் காந்தி

பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் வாக்குகளைத் திருட தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு முயற்சிப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை குற்றஞ்சாட்டினார். மக்களவை எ... மேலும் பார்க்க