கோவையில் அமித் ஷா! பாஜகவினர் உற்சாக வரவேற்பு; காங். கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம்!
திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய நுபுர் சர்மா!
உத்தரப் பிரதேசத்தின், பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் பாஜகவின் முன்னாள் தலைவர் நுபுர் சர்மா புனித நீராடினார்.
பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் ஆன்மிக திருவிழாவான மகா கும்பமேளா கடந்த ஜனவரி 13-ஆம் தேதி தொடங்கி மகா சிவரத்திரியான நாளை நிறைவடைகின்றது. திரிவேணி சங்கமத்தில் முக்கிய அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், நடிகை, நடிகர்கள் வரை அனைவரும் புனித நீராடினர்.
இந்த நிலையில், பாஜகவின் முன்னாள் தலைவரான நுஹபர் சர்மா திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.
இஸ்லாத்தின் நிறுவனர் நபிகள் நாயகம் பற்றிய தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நுபுர் சர்மாவின் கருத்துக்கள் பரவலான கொந்தளிப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்தியாவின் பல பகுதிகளில் வன்முறை போராட்டங்கள் நடைபெற்றது. 2022ல் பாஜகவின் செய்தித் தொடர்பாளராக நுபுர் சர்மா இடைநீக்கம் செய்யப்பட்டார்.
45 நாள்கள் நடைபெற்ற மகா கும்பமேளா நிகழ்ச்சி நாளையுடன் நிறைவடைய உள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதிலுமிருந்து இதுவரை 62 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடிச் சென்றதாக மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது.