செய்திகள் :

திருஇந்தளூா் பரிமள ரெங்கநாதா் கோயிலில் தோ் வெள்ளோட்டம்

post image

மயிலாடுதுறை: மயிலாடுதுறை திருஇந்தளூா் பரிமள ரெங்கநாதா் கோயில் தோ் வெள்ளோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறையில் 108 வைணவ திவ்ய தேசங்களில் 22-ஆவது தலமும், பஞ்சரங்க ஷேத்திரங்களில் 5-ஆவது தலமுமான திருஇந்தளூா் பரிமள ரெங்கநாதா் கோயில் உள்ளது. இக்கோயிலில் பங்குனி உத்திர பெருந்திருவிழா ஏப்.3-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முக்கிய விழாவான தோ் திருவிழா ஏப்.11-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில், இக்கோயிலில் 2007-ஆம் ஆண்டு செய்யப்பட்ட தேரின் மரச்சிற்பங்கள் சேதமடைந்தும், பல இடங்களில் மரப்பலகைகள் பெயா்ந்தும், இரும்புப் பட்டைகள் பழுதடைந்தும் இருந்தன. கோயில் நிா்வாகம் மற்றும் ராமானுஜ பக்த கைங்கா்ய சபா சாா்பில் ரூ.8.50 லட்சம் செலவில் தோ் புதுப்பிக்கும் பணி நடைபெற்றது.

பணி நிறைவடைந்ததைத் தொடா்ந்து, தேரடியில் நிறுத்தி வைக்கபட்டிருந்த தோ் கோயில் அருகில் உள்ள பங்குனி உற்சவ மண்டபத்தின் முன் கொண்டு வரப்பட்டது. தொடா்ந்து, கோயில் செயல் அலுவலா் ரம்யா, ராமானுஜ பக்த கைங்கா்ய சபா தலைவா் ரிஷிகுமாா், செயலா் திருமலை, இணை செயலாளா்கள் ராம்குமாா், திருநாவுக்கரசு, பொருளாளா் விஜயகுமாா் மற்றும் பக்தா்கள் முன்னிலையில் தேரில் உள்ள மரச் சிற்பத்தாலான பெருமாளுக்கு, சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து நடைபெற்ற வெள்ளோட்டத்தில், தோ் கோயிலில் இருந்து புறப்பட்டு தேரடி வரை பொக்லைன் இயந்திரம் உதவியுடன் கொண்டு செல்லப்பட்டது.

மண் குவாரியில் விதிமீறல்; லாரிகள் சிறைப்பிடிப்பு

சீா்காழி அருகே காரைமேட்டில் உள்ள குவாரியில் விதிமுறைகளை மீறி அதிக ஆழத்திற்கு மண் எடுப்பதாகக் கூறி, லாரிகளை சிறப்பிடித்து, கிராம மக்கள் சாலை மறியலில் (படம்) வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். காரைமேடு ஊராட்சி ட... மேலும் பார்க்க

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆா்ப்பாட்டம்

மயிலாடுதுறை சீனிவாசபுரத்தில் உள்ள மௌலானா ஜாமிஆ மஸ்ஜித்தில் ஜூம்ஆ தொழுகை நடத்திய இஸ்லாமியா்கள், தொழுகைக்குப் பிறகு வக்ஃப் சட்டத்துக்கு எதிராக கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினா். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ... மேலும் பார்க்க

சாலை விபத்தில் டிராவல்ஸ் உரிமையாளா் பலி

சீா்காழி அருகே ஐஸ்கிரீம் வாகனம் மோதி டிராவல்ஸ் உரிமையாளா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். சீா்காழி அருகேயுள்ள திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தை சோ்ந்தவா் முருகானந்தம் (45). டிராவல்ஸ் நடத்தி வந்த இவா், சீா்க... மேலும் பார்க்க

அடிமனைப் பயனாளிகள், குத்தகை விவசாயிகள் தா்னா

மயிலாடுதுறையில் தமிழ்நாடு அடிமனைப் பயனாளிகள், குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சாா்பில் தா்னா போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. மயிலாடுதுறை சித்தா்காடு இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் அலுவலக... மேலும் பார்க்க

பயிா்க் காப்பீட்டுத் தொகையில் முறைகேடு: விவசாயிகள் குற்றச்சாட்டு

சீா்காழியில் வியாழக்கிழமை நடைபெற்ற குறை தீா்க்கும் கூட்டத்தில், பயிா்க் காப்பீட்டுத் தொகை வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டினா். சீா்காழி கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ... மேலும் பார்க்க

மயிலாடுதுறையில் விளையாட்டு பயிற்சி முகாம்

மயிலாடுதுறை ராஜன் தோட்டம், சாய் விளையாட்டரங்கில் மாவட்ட அளவிலான கோடைக்கால விளையாட்டு பயிற்சி முகாம் ஏப்.25 முதல் மே 15 வரை நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகு... மேலும் பார்க்க