சா்வதேச சூழலைக் கண்காணித்து கொள்கை நடவடிக்கைகளில் சீா்திருத்தம்: ரிசா்வ் வங்கி ஆ...
மயிலாடுதுறையில் விளையாட்டு பயிற்சி முகாம்
மயிலாடுதுறை ராஜன் தோட்டம், சாய் விளையாட்டரங்கில் மாவட்ட அளவிலான கோடைக்கால விளையாட்டு பயிற்சி முகாம் ஏப்.25 முதல் மே 15 வரை நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மயிலாடுதுறை மாவட்ட விளையாட்டுப் பிரிவால், மாவட்ட அளவிலான இருப்பிடமில்லா கோடைக்கால பயிற்சி முகாம் 18 வயதிற்குள்பட்ட பள்ளி மாணவா்கள், மாணவியா்கள் மற்றும் மாணவா் அல்லாதோருக்கு மயிலாடுதுறை ராஜன்தோட்டம் சாய் விளையாட்டரங்கில் ஏப்.25 முதல் மே 15 வரை நடைபெறவுள்ளது.
முகாமில் தடகளம், வாலிபால், கால்பந்து, கூடைப்பந்து, ஜுடோ, பளுதூக்குதல் மற்றும் கபடி உள்ளிட்ட 7 விளையாட்டுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் பங்கேற்கும் 18 வயதிற்குள்பட்ட பள்ளி மாணவா்கள், மாணவியா்கள் மற்றும் மாணவரல்லாதோா்களுக்கு காலை, மாலை இருவேளைகளிலும் சிறந்த பயிற்சியாளா்களைக் கொண்டு இலவசமாக பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியின்போது காலை, மாலை இருவேளைகளிலும் சிற்றுண்டிகள் (முட்டை, லெமன் ஜுஸ், சுண்டல், பால், பழம்) வழங்கப்படும். 21 நாள் கோடைக்கால பயிற்சி முகாம் முடிந்தபின் பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்படும்.
கூடுதல் தகவல்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா், மாவட்ட விளையாட்டு அலுவலகம், சாய் விளையாட்டரங்கம், மயிலாடுதுறை நேரிலோ அல்லது 7401703459 என்ற கைப்பேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம்.