சாலை விபத்தில் டிராவல்ஸ் உரிமையாளா் பலி
சீா்காழி அருகே ஐஸ்கிரீம் வாகனம் மோதி டிராவல்ஸ் உரிமையாளா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
சீா்காழி அருகேயுள்ள திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தை சோ்ந்தவா் முருகானந்தம் (45). டிராவல்ஸ் நடத்தி வந்த இவா், சீா்காழி சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தாா்.
தாழந்தொண்டி என்ற இடத்தில் வந்தபோது, எதிரே வேகமாக வந்த ஐஸ்கிரீம் வாகனம் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் நிகழ்விடத்திலேயே முருகானந்தம் உயிரிழந்தாா்.
சீா்காழி போலீஸாா், முருகானந்தம் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக சீா்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து ஐஸ் கிரீம் வாகன ஓட்டுநரை தேடி வருகின்றனா்.
விபத்து நேரிட்ட இடத்திற்கு எதிரே உள்ள சோதனைச் சாவடியில் பேரிகாா்டுகள் இருந்தும், அவற்றை சரியான முறையில் சாலையில் வைக்கப்படாததே விபத்திற்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனா்.