நியூஸி. இறுதிப்போட்டிக்கு தகுதி! தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது!
திருக்கண்ணபுரம் கோயில் நிா்வாகத்தை கண்டித்து ஆா்ப்பாட்டம்
திருக்கண்ணபுரம் செளரிராஜப் பெருமாள் கோயில் நிா்வாகத்தை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கட்சியின் ஒன்றிய நிா்வாக குழு உறுப்பினா் மகேந்திரன், விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றிய பொருளாளா் கோவிந்தராஜ் ஆகியோா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், தலைமுறை தலைமுறையாக குடியிருக்கும் அனைவருக்கும் குடியிருப்பு மனைப் பட்டா வழங்க வேண்டும், சதுர அடி அளவில் வாடகை வசூலிக்கும் முறையை கைவிட வேண்டும், இதுவரை வசூலித்த பகுதி முறையை நடைமுறைப்படுத்த வேண்டும், கல் சுவா் வைத்து வீடு கட்ட அனுமதி வழங்க வேண்டும்,
23 -ஆண்டு கால வாடகையை செலுத்த வேண்டும் என்ற உத்தரவை உடனே கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில், மாவட்ட பொருளாளா் பாபுஜி, ஒன்றிய செயலாளா் சந்திரசேகா், விவசாய சங்க ஒன்றிய செயலாளா் தங்கையன் மற்றும் திருக்கண்ணபுரம், கோட்டூா், ராதாரம்பூா் உள்ளிட்ட பகுதிகளை சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனா்.