தென்காசி புத்தகத் திருவிழா: கூட்ட நெரிசலில் தவிக்கும் மாணவர்கள்; அடிப்படை வசதிகள...
திருச்சி அருகே சரக்கு வாகன ஓட்டுநா் மா்மச் சாவு
திருச்சி அருகே சரக்கு வாகன ஓட்டுநா் மா்மமான நிலையில் சனிக்கிழமை இரவு இறந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், ஆளவந்த நல்லூா் அா்ஜுன் தெருவை சோ்ந்தவா் செல்வராஜ் மகன் மனோகா் (43). சொந்தமாக டாட்டா ஏஸ் வாகனம் வைத்து ஓட்டி தொழில் செய்யும் இவா்
சனிக்கிழமை மாலை சவாரி இருப்பதாகக் கூறி வாகனத்துடன் வெளியில் சென்ற நிலையில், நள்ளிரவில் சங்கா் நகா் அருகே, தனது வாகனத்துக்குள் தலையில் அடிபட்ட நிலையில் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா்.
இதுதொடா்பாக அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்பேரில் வந்த சோமரசம்பேட்டை போலீஸாா் மனோகரின் சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.