செய்திகள் :

திருச்சி - நாகைக்கு சாலை வழியே செல்லும் விஜய்!

post image

சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்தடைந்த தவெக தலைவர் விஜய், சாலை வழியாக நாகப்பட்டினத்துக்கு காரில் புறப்பட்டார்.

நாகப்பட்டினம் எல்லையில் விஜய்யை வரவேற்க தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் காத்துக் கொண்டுள்ளனர்.

நாகப்பட்டினம் மற்றும் திருவாரூரில் இன்று மக்கள் சந்திப்பு பிரசாரத்தை தவெக தலைவா் விஜய் மேற்கொள்ளவிருக்கிறாா்.

இதற்காக சென்னையில் இருந்து இன்று காலை தனி விமானத்தில் புறப்பட்டு திருச்சி விமான நிலையம் வந்தார். அங்கிருந்து கார் மூலம் நாகப்பட்டினத்துக்கு புறப்பட்டுச் சென்றார்.

திருச்சியில் கடந்த வாரம் பிரசாரம் மேற்கொள்ள விஜய் வருகை தந்தபோது, விமான நிலையத்துக்குள் தொண்டர்கள் குவிந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று திருச்சி விமான நிலையத்துக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு, விஜய்யை வரவேற்க வந்த தொண்டர்கள் அனைவரும் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இதனிடையே, திருச்சியில் இருந்து ஈசிஆர் சாலையில் வாஞ்சூர் வழியாக நாகை செல்ல விஜய் திட்டமிட்டிருந்த நிலையில், திடீர் மாற்றமாக தஞ்சாவூர் புறவழிச் சாலையில் நாகை செல்கிறார்.

வாஞ்சூரில் விஜய்யை வரவேற்க நூற்றுக்கணக்கான தொண்டர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில், திருவாரூர் வழியாக நாகை சென்றால், வாஞ்சூர் திட்டம் கைவிடப்படும் எனத் தெரிகின்றது.

நாகப்பட்டினம், புத்தூர் ரவுண்டானா பகுதியில் உள்ள அண்ணா சிலை அருகே இன்று நண்பகல் 12.30 மணியளவிலும், திருவாரூர் தெற்கு வீதியில் பிற்பகல் 3 மணியளவிலும் விஜய் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.

விஜய்யின் வருகையை ஒட்டி, நாகப்பட்டினத்தில் காலை முதலே ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.

TVK leader Vijay, who arrived in Trichy by private flight from Chennai, left for Nagapattinam by road in a car.

இதையும் படிக்க : எச்1பி விசா கட்டணம் ரூ. 88 லட்சமாக உயர்வு! இந்தியர்களுக்கு பேரிடி!

ஏன் சனிக்கிழமை மட்டும் பிரசாரம்.. சிலருக்கு ஓய்வு கொடுக்கவே: விஜய் பேச்சு - விடியோ

நாகை: ஏன் சனிக்கிழமைகளில் மட்டும் பிரசாரம் செய்கிறேன் என்றால், உங்களுக்கு தொந்தரவு கூடாது என்பதற்காகவே வாரயிறுதி நாள்களில் பிரசாரம் மேற்கொள்கிறேன், சிலருக்கு ஓய்வு கொடுக்கவே, ஓய்வு நாள்களில் பிரசாரம் ... மேலும் பார்க்க

வெளிநாட்டு முதலீடா? வெளிநாட்டில் முதலீடா? - முதல்வரை விமர்சித்த விஜய்!

முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டது குறித்து தவெக தலைவர் விஜய் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு பிர... மேலும் பார்க்க

மிரட்டிப் பார்க்கிறீர்களா? பூச்சாண்டி வேலை வேண்டாம்: விஜய்

நாகையில் இன்று தனது பிரசாரத்தை மேற்கொண்டு உரையாற்றத் தொடங்கிய விஜய், நாகைக்கு 14 ஆண்டுகளுக்கு முன்பே நான் வந்தேன். மீனவர்கள் பாதுகாப்பு முக்கியம் என்று விஜய் பேசினார்.அவர் தொடர்ந்து பேசுகையில்,இலங்கைக... மேலும் பார்க்க

தமிழில் 100 மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு ரூ.10,000 வழங்கப்படும்! - அன்பில் மகேஸ்

பொதுத் தேர்வில் தமிழில் 100 மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களுக்கு ரூ.10,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார். சென்னையில் பள்ளிக் கல்வித் துறை சார்பி... மேலும் பார்க்க

காவிரி கடைமடையில் தவெக தலைவர் விஜய்! சற்று நேரத்தில் பிரசாரம்

நாகை: தவெக தலைவர் விஜய், நாகையில் இன்று தனது பிரசாரத்தை மேற்கொள்ளவிருக்கிறார். காவிரி கடைமடைப் பகுதியில் விஜய் இன்னும் சற்று நேரத்தில் உரையாற்ற விருக்கிறார். விஜய் நாகையில் பிரசாரம் செய்ய காவல்துறை அன... மேலும் பார்க்க

எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு?

நீலகிரி, ஈரோடு உள்பட 8 மாவட்டங்களில் இன்று (செப்.20) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், தென்னிந்திய பகுதிகளில் வ... மேலும் பார்க்க