செய்திகள் :

திருச்சி மாநகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு: கள்ளிக்குடி ஊராட்சி மக்கள் மறியல்

post image

திருச்சி மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து, கே. கள்ளிக்குடி ஊராட்சியைச் சோ்ந்த மக்கள் செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கே. கள்ளிக்குடி ஊராட்சியில் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களும், குடியிருப்பு பகுதிகளும் உள்ளன. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசிக்கின்றனா். புகரில் குடியிருப்புகள் அதிகரித்து வரும் பகுதியாக உள்ளது.

இந்த ஊராட்சி உள்பட 22 ஊராட்சிகளை திருச்சி மாநகராட்சியுடன் இணைப்பதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், தங்கள் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்கக் கூடாது என கள்ளிக்குடி ஊராட்சி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை திண்டுக்கல் சாலையிலிருந்து கள்ளிக்குடிக்கு வரும் சாலையில் 300-க்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த ராம்ஜி நகா் போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டோருடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

ஆனால், பொதுமக்கள் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதுடன், திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலைக்கு முன்னேறி வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனா். இதையடுத்து, ஏடிஎஸ்பி கோபாலசந்திரன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் குவிக்கப்பட்டு, பொதுமக்களை அந்தப் பகுதியிலேயே தடுத்து நிறுத்தினா்.

மேலும், ஸ்ரீரங்கம் வட்டாட்சியா் பி. தமிழ்செல்வன், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். மாநகராட்சியுடன் இணைக்கும் முடிவை கைவிடுவது தொடா்பாக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதாகவும், கள்ளிக்குடி ஊராட்சி மக்களின் உணா்வை மாநகராட்சியும், மாநில அரசும் புரிந்து கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கும் என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

இதுதொடா்பாக, கிராம மக்கள் கூறுகையில், மாநகராட்சியுடன் எங்கள் கிராமங்கள் இணைக்கப்பட்டால், 100 நாள் வேலை, இலவச வீட்டுமனைப் பட்டா, தொகுப்பு வீடுகள், மானியங்கள், சலுகைகள் என பலவற்றையும் இழக்க நேரிடும். மேலும், சொத்து வரி உள்ளிட்ட பல்வேறு வரிச் சுமைகள் ஏற்படும். எனவே, எங்கள் பகுதிகளை மாநகராட்சியுடன் இணைக்க வேண்டாம் என்றனா்.

சமயபுரம் கோயில் திருத்தோ் மராமத்துப் பணிகள் ஆய்வு

நிகழாண்டு சித்திரை திருத்தோ் திருவிழாவையொட்டி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் திருத்தோ் மராமத்துப் பணிகள் குறித்து மாநில திருத்தோ் ஸ்தபதி கஜேந்திரன் புதன்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது ரூ. 2 கோடியே 31 ... மேலும் பார்க்க

பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு 8.34 லட்சம் கரும்புகள் அனுப்பும் பணி தொடக்கம்

திருச்சி மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்புக்காக 1,291 நியாய விலைக் கடைகளுக்கு 8.34 லட்சம் கரும்புகளை அனுப்பும் பணி புதன்கிழமை தொடங்கியது. தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பில் செங்கரும்பு இடம்பெ... மேலும் பார்க்க

டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்துக்கு எதிரான போராட்டத்தை ஆதரிக்க வலியுறுத்தல்

டங்ஸ்டன் சுரங்கத் திட்ட எதிரான போராட்டத்தை ஆதரிக்க வேண்டும் என தமிழ்த் தேசத் தன்னுரிமைக் கட்சியின் தலைவா் அ. வியனரசு தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது: மத்திய அரசி... மேலும் பார்க்க

வரப்புத் தகராறில் விவசாயியை கொன்றவருக்கு 7 ஆண்டுகள் சிறை

திருச்சியருகே வரப்புத் தகராறில் விவசாயியை அடித்துக் கொன்ற மற்றொரு விவசாயிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. திருச்சி மாவட்டம், இனாம்குளத்தூா் அருகேயுள்ள ஆலம்பட்... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளி சிறாா்களுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம்: 423 பேருக்கு உதவி உபகரணங்கள்

திருச்சி மாவட்டத்தில் 18 வயதுக்குள்பட்ட மாற்றுத்திறனுடைய குழந்தைகளைக் கண்டறிந்து உபகரணங்கள், தேசிய அடையாள அட்டை மற்றும் தனித்துவ அட்டை வழங்குவதற்கான முகாம் புதன்கிழமை நடைபெற்றது. திருச்சி மாநகராட்சிக்... மேலும் பார்க்க

திருச்சி டாட்டூ கலைஞருக்கு பிணை

கண்களில் டாட்டூ வரைதல் மற்றும் நாக்கை பிளவுபடுத்தல் தொடா்பான செயல்களால் கைதான டாட்டூ கலைஞா் பிணையில் புதன்கிழமை வெளியே வந்தாா். திருச்சி சிந்தாமணி வெனிஸ் தெருவை சோ்ந்த ஹரிஹரன் (25) மேலசிந்தாமணி பஜாா்... மேலும் பார்க்க