செய்திகள் :

திருச்சி: வாய்க்காலில் பாலம் இல்லாமல் அவதிப்படும் விவசாயிகள்… கேள்விக்குறியாகும் விவசாயம்!

post image

திருச்சி, திருப்பராய்த்துறை ஊராட்சியில் எலமனூர் என்ற கிராமம் உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் உள்ளன. அப்பகுதி விவசாயிகள் தங்கள் வயலை சென்றடைய 40 அடி தூரம் கொண்ட ஒரு கொடிங்கால் வாய்க்காலைக் கடந்து செல்ல வேண்டும். அப்படி அவர்கள் கடந்து செல்ல இதுவரை ஒரு பாலம்கூட இல்லாத அவல நிலை உள்ளது. ஒரு தென்னை மரத்தைப் பாலமாகப் பயன்படுத்தி வருகிறார்கள் அப்பகுதி விவசாயிகள்.

இது குறித்து இந்த ஊர் மக்களிடம் பேசும்போது. ``இந்த கொடிங்காலில் கிட்டத்தட்ட 50 வருடத்திற்கும் மேலாகவே பாலம் இல்லாம தான் இருக்கு. எங்க தாத்தன் பூட்டன் காலத்துல இருந்து இந்த நிலைமை தான் எங்களுக்கு. கொடிங்காலுக்கு இந்த பக்கமும் அந்த பக்கமும் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் இருக்குது. கொடிங்காலுக்கு இந்த பக்கம் இருக்கவங்க நல்லா விவசாயம் செஞ்சுட்டு இருக்காங்க. ஆனா அந்த பக்கம் நிலம் இருக்கவங்க வயலுக்கு போகவே வழி கெடயாது.

இங்க இருந்து கொடிங்கால கடக்குறதுக்கு ஒரு பாதையும் இல்ல. கொஞ்ச வருஷமா நாங்களே ஒரு மூணு தென்ன மரத்தை வெட்டி போட்டு அதுல நடந்து போயிட்டு இருந்தோம். இப்போ அதுல ரெண்டு மரம் ஒடஞ்சிருச்சு. மீதி ஒன்னு மட்டும் தான் இருக்கு அதுல தான் நடந்து போயிட்டு இருக்கோம். அந்த தென்ன மரத்தை போடுறதுக்கும் ஆயிரக்கணக்குல செலவாகுது. எங்க சொந்த வயலுக்கு போகவே எங்களுக்கு இவ்ளோ கஷ்டமா இருக்கு. எவ்வளவோ கோரிக்கைகள் எங்க தரப்புல இருந்து கொடுத்துருக்கோம். எங்களுக்கு இதுக்கு ஒரு தீர்வு கிடைக்கிற மாதிரியே தெரியல” என்று கூறுகின்றனர்.

கொடிங்கால் என்பது உய்யகொண்டானின் வடிகால். இந்த உய்யகொண்டானின் பாசனம் எலமனூரின் தெற்கு பகுதியில் இருநூறு ஏக்கர் அளவில் உள்ளது. இது கொடியாளம், அனலை, திருப்பராய்த்துறை என அனைத்துக்கும் சமமானது. கொடியாளத்திற்கும் அனலைக்கும் பாலம் உள்ளது. ஏன் எலமனூரில் மட்டும் பாலம் இல்லை என்பது அந்த கிராம மக்களின் கேள்வியாக உள்ளது. சரியான நீர்வழிப் பாதை இல்லாமல் கடந்த இரண்டு ஆண்டுகளில் வயலில் நீர் புகுந்து வயலே வீணாகிவிட்டதாக விவசாயிகள் கூறுகின்றனர். அதன் படங்களும் இணைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து எலமனூரின் பஞ்சாயத்துத் தலைவர் ஸ்ரீமுருகன் நம்முடன் பேசுகையில் , “எனக்கு 62 வயசாகுதுங்க. எனக்கு விவரம் தெரிஞ்சதுல இருந்து இந்த கொடிங்கால்க்கு பாலம்'ன்னு ஒன்னு கிடையாது. ஊர் ஆளுங்கல்லாம் சேர்ந்து தென்ன மரத்தை வெட்டி போட்டு நடந்திட்டு இருக்கோம். இப்போ அதுவும் இல்லாம போயிருச்சு. இங்க விவசாயமே கேள்விக்குறியா மாறிருச்சு. பத்து பதினைந்து வருஷமா சொல்லிட்டு இருக்காங்க பாலம் போட்டு தரேன்னு. இது வரைக்கும் ஒன்னுமே பண்ணல. கொடிங்கால்க்கு அந்த பக்கம் மட்டுமே நூறு ஏக்கர்க்கும் மேல விளைநிலங்கள் இருக்கும். தண்ணி பிரச்னை அப்டின்னு எதுமே இல்லை. விவசாயம் சிறப்பா பண்றதுக்கு எல்லா வழியும் இருக்கு. ஆனா இந்த பாலம் இல்லாததுனால எல்லாமே இப்போ கேள்விக்குறியா இருக்குது. இந்த பக்கம் போக சிரமமா இருக்கதால நூறுநாள் வேலைக்கும் யாரும் வர மாட்டிக்கிறாங்க” என்றார்.

இது குறித்து எலமனூர் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் விமானப்படை அதிகாரி K. தங்கராஜ், ``இந்த ஊரே ஒரு தீவு மாதிரிங்க. இந்த ஊருக்கு உள்ள வர்றதுக்கே ஒரே ஒரு ரயில்வே பாதை மட்டும் தான் இருக்கும். என்னுடைய வயல்ல வேலை செய்ற சில பெண்கள் என் கிட்ட வந்து அவங்க கஷ்டத்தை சொன்னாங்க. இந்த கொடிங்கால கடந்து போக ஒரே வழி தான் இருக்கு. அந்த தென்ன மரத்துல ஏறி நடந்து தான் போகனும். இதே உரம், நெல், கருவிகள்,களைகள், நாத்து எல்லாம் கொண்டு போனும்னுனா கீழ இறங்கி தண்ணில தான் நடந்து போகணும். அப்போ அவங்க நெனெஞ்சிட்டே நடந்து போற நிலைமைல தான் இருக்காங்க. நிறைய நேரங்கள்ல தண்ணி கழுத்து வரைக்கும் கூட இருக்கும். அதுவும் அவங்க மாதவிடாய் காலங்கள்ல நடந்து போக இன்னும் சிரமமா இருக்கிறதா சொன்னாங்க. தண்ணி அதிகமா வந்த சமயத்துல ரெண்டு மூணு பேரு தண்ணில இழுத்துட்டு போய், காப்பாற்றபட்டுருக்காங்க. கடந்த வாரம் கூட தண்ணில நெனஞ்சி சில பெண்கள் காய்ச்சல்ன்னு சொல்றாங்க. இப்படி அவங்க வயலுக்கு போகவே இந்த அளவுக்கு சிரமப்படுகிறார்கள்” என்று கூறினார்.

“இந்த ஊர் மக்கள் பாலம் அமைத்து தரச் சொல்லி பஞ்சாயத்துத் தலைவரிடம் கோரிக்கை வைத்திருக்காங்க. நான் முதல்வரின் முகவரி அமைப்புல புகார் கொடுத்திருந்தேன். அதன் பிறகு வட்டார வளர்ச்சி அதிகாரியும்(BDO) யூனியன் என்ஜினீயர் அவர்களும் வந்து பார்த்திட்டு போனாங்க. இவங்க இந்த பாலத்த நாங்க கட்ட மாட்டோம். இது எங்களோட பொறுப்புல இல்ல. PWD தான் செய்வாங்கன்னு சொல்றாங்க.

நான் தமிழ்நாடு பொதுப்பணித் துறைக்கும் ஒரு மனு கொடுத்திருந்தேன். ஆனா இப்போ தமிழ்நாடு பொதுப்பணி துறை(PWD) , இந்த பாலம் கட்ட நாங்க NOC ( no objection certificate) மட்டும் தான் தருவோம்; நாங்க பாலம் கட்டி தர மாட்டோம் அப்டின்னு சொல்றாங்க. இது BDO பொறுப்புல தான் வரும்ன்னு சொல்றாங்க. இப்படி இவங்க மாத்தி மாத்தி இந்த பாலம் எங்க பொறுப்புல இல்லன்னு சொல்லிட்டு இருக்காங்க. இதுனால நாங்க போட்ட மனுவும் இன்னும் நிலுவையில தான் இருக்கு. இதை யார் முன்னெடுத்துப் பண்ண போறாங்க, இந்த பிரச்னைக்கு எப்போ முடிவு கிடைக்கும்ன்னு தெரியவில்லை. எங்களோட கோரிக்கை அனலை ரோட்டில் உள்ளது போன்ற பெரிய கொடிங்கால் பாலம் எங்களுக்கும் வேண்டும் மற்றும் வாய்க்காலின் இரண்டு புறமும் நீர்வழிச் சாலை வேண்டும்” என்று கூறுகிறார் தங்கராஜ்.

Aadhar Card: 'இன்னும் இரண்டு நாள்களே இலவசம்..!' - ஆதாரை இலவசமாக அப்டேட் செய்வது எப்படி? | How to?

10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதார் அட்டையில் நமது தகவல்களை அப்டேட் செய்வது அவசியம். காரணம், அந்த 10 ஆண்டுகளில் முகத்தோற்றம் முதல் முகவரி வரை மாறியிருக்கலாம். பல இடங்களில் ஆதார் அட்டை அடையாள அட்டையாக செயல்ப... மேலும் பார்க்க

Syria: குடும்ப ஆட்சிக்கு முடிவுகட்டிய கிளர்ச்சியாளர்கள் - சிரியா பிரச்னையால் இந்தியாவுக்கு பாதிப்பு?

மத்திய கிழக்கு நாடான சிரியாவை, 53 ஆண்டுகளாக ஆட்சி செய்துவந்த அசாத் குடும்பத்தின் ஆட்சியைக் கவிழ்த்திருக்கிறார்கள் கிளர்ச்சியாளர்கள்!அசாத் குடும்ப ஆட்சி:சிரியாவில் பிற்படுத்தப்பட்ட இனமாகக் கருதப்படும் ... மேலும் பார்க்க

CAG Report: 'ஏகப்பட்ட காலி பணியிடங்கள்' - தமிழ்நாடு சுகாதாரத்துறை குறித்து ரிப்போர்ட்

2016 - 2022-ம் ஆண்டு, தமிழ்நாடு பொது சுகாதார கட்டமைப்பு மற்றும் சுகாதார சேவை துறை பராமரிப்பு பற்றிய இந்திய தலைமை தணிக்கையகம் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, தமிழ்நாடு மாநில சுகாதார துறையில் கு... மேலும் பார்க்க

`உசுர கையில பிடிச்சிட்டு பிழைப்பு நடத்துறோம்'- சிதிலமடைந்த நகராட்சி வணிக வளாகம்; குமுறும் வணிகர்கள்!

திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையம் அருகே நகராட்சிக்குச் சொந்தமான அண்ணாமலை வணிக வளாகங்கள் உள்ளது . இங்கு மொத்தம் 80க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகிறது. இந்த இடத்தில் நெட் சென்டர், போட்டோ ஸ்டுடியோ,... மேலும் பார்க்க

CAG Report: தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் உயர்வு... எவ்வளவு தெரியுமா?!

நேற்று இந்திய தலைமை கணக்கு தணிக்கையகம் சில அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. அதில் ஒன்றான 2022-23 ஆண்டிற்கான தமிழ்நாட்டின் மாநில நிதிநிலை அறிக்கை படி, 2022 - 23 ஆண்டில், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.23... மேலும் பார்க்க

தூத்துக்குடி: "எங்க ஊர் சுடுகாடு மாதிரி இருக்குது" - 23 ஆண்டுகளாகப் போராடும் மக்களை கவனிக்குமா அரசு?

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகேயுள்ள ஊர் கணேசபுரம். இங்கு சுமார் இருநூறு பட்டியலின குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த மக்கள் வாழ்வில் முன்னேற வேண்டும் என்பதற்காகக் கடந்த 2001-ம் ஆண்டு, அ... மேலும் பார்க்க