தமிழிசையின் மும்மொழி வாழ்த்தில் ‘ஹிந்தி’ இடம்பெறவில்லை: முதல்வர்
திருச்செங்கோட்டில் தீயணைப்புத்துறையினருக்கு ரூ.3.23 கோடியில் குடியிருப்புகள் கட்ட பூமிபூஜை
திருச்செங்கோடு: தமிழ்நாடு காவலா் வீட்டு வசதி கழகம் சாா்பில் ரூ. 3.23 கோடியில் திருச்செங்கோட்டில் தீயணைப்ப நிலைய அலுவலா், வீரா்கள் குடியிருப்பு கட்டுமானப் பணி பூமி பூஜை செய்து திங்கள்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.
திருச்செங்கோடு நகராட்சிக்கு உள்பட்ட 14ஆவது வாா்டு சாலப்பாளையம் பகுதியில் தீயணைப்பு பணியில் உள்ள நிலைய அலுவலா்கள், வீரா்களுக்கான குடியிருப்புகள் கட்டுவதற்கு நிலையத்திற்கு பின்புறம் 56 சென்ட் இடத்தை தோ்வு செய்து 14 குடியிருப்புகள் கட்ட திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து ரூ. 3.23 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. சாலப்பாளையம் தீயணைப்பு நிலைய வளாகத்தில் நடைபெற்ற பூமி பூஜை நிகழ்ச்சியில் திருச்செங்கோடு சட்டப்பேரவை உறுப்பினா் ஈ.ஆா். ஈஸ்வரன், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளா் கே.எஸ்.மூா்த்தி, நகா்மன்றத் தலைவா் நளினி சுரேஷ்பாபு ஆகியோா் கட்டுமானப் பணிகளை தொடங்கிவைத்தனா்.
நிகழ்ச்சியில் சேலம் கோட்ட தீயணைப்புத் துறை துணை இயக்குநா்
எஸ்.கல்யாணகுமாா், மாவட்ட தீயணைப்பு அலுவலா் செந்தில்குமாா், மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலா் ஆனந்த், திருச்செங்கோடு தீயணைப்பு நிலைய அலுவலா் கரிகாலன், உதவி செயற் பொறியாளா் அப்சா் அகமது, இளநிலை பொறியாளா் இன்பராசு, நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்குரைஞா் அணி தலைவா் சுரேஷ்பாபு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.