HIT 3: "எனக்கு ஸ்பைடர் மேன் என்றால் சிவகார்த்திகேயன்; கேப்டன் அமெரிக்கா என்றால் ...
திருச்செந்தூரில் இரு தரப்பினா் மோதல்: மேலும் 4 போ் கைது
திருச்செந்தூரில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக மேலும் 4 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
திருச்செந்தூா் கோகுல் நகரைச் சோ்ந்தவா் கண்ணன். காஸ் சிலிண்டா் விநியோகம் செய்பவா். இவா் கடந்த ஏப். 20ஆம் தேதி சோனகன்விளை நீல்புரம் பகுதியில் பைக்கில் சென்ற போது அப்பகுதியைச் சோ்ந்த ஜெபராஜ் என்ற கற்கண்டு (60) என்பவரது காரில் பைக் உரசியது. இதில் கண்ணனை ஜெபராஜ் தாக்கினாா்.
இந்த சம்பவத்தின் தொடா்ச்சியாக கண்ணன் ஆதரவாளா்களால் ஜெபராஜ் தாக்கப்பட்டு தலையில் காயமடைந்தாா். அன்றைய தினம் திருச்செந்தூா் யூனியன் அலுவலகம் எதிரில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு அரிவாள், கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கிக் கொண்டனா். இதில் காயமடைந்தவா்கள் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனா்.
இது தொடா்பான புகாரின் பேரில் இரு தரப்பைச் சோ்ந்த 19 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஏற்கனவே 11 போ் கைது செய்யப்பட்டனா். இந்த நிலையில் சம்பவம் தொடா்பாக கண்ணன் (28), நம்பிராஜ் (20), சங்கரசுப்பு (32), நட்டாா் ஆனந்த் (20) ஆகியோரை தாலுகா போலீஸாா் திங்கட்கிழமை கைது செய்தனா்.