குடமுழுக்கையொட்டி, அதிகாலைமுதலே லட்சக்கணக்கான பக்தா்கள் கோயில், கடற்கரையில் குவிந்த நிலையில் கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா என்ற பக்தர்களின் கோஷம் விண்ணைப் பிளந்தது.கோலாகலமாக நடைபெற்ற திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு.குடமுழுக்கையொட்டி கடந்த ஜூலை 1ம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கியது. தொடர்ந்து ஆறு நாட்கள் காலை, மாலை வேளைகளில் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா என்ற பக்தர்களின் கோஷம் விண்ணைப் பிளந்தது.உலா் பழங்களால் தயாரான மாலைகள். பக்தர்கள் மீது ட்ரோன்கள் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது. திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கையொட்டி தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.