திருச்செந்தூா் அருகே செம்மண் தேரியில் ஆட்சியா் ஆய்வு
திருச்செந்தூா் அருகே தேரிமண் நிறைந்த வனப்பகுதியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் ஆய்வு மேற்கொண்டசாா்.
உடன்குடி அருகே குதிரைமொழி ஊராட்சி வனப் பகுதியில் சுமாா் 12,000 ஏக்கா் செம்மண் தேரி வனப்பகுதி அமைந்துள்ளது.
இப்பகுதியில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் திடீா் ஆய்வு மேற்கொண்டு மணலின் தன்மை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா். மேலும், மணலின் மாதிரியும் சேகரிக்கப்பட்டது. இதே பகுதியில் அண்மையில் இயற்கை வளம் மற்றும் மனித வள மேம்பாட்டுத்துறையினரும் ஆய்வு மேற்கொண்டுள்ளனா். அரசு சாா்பில் இப்பகுதியில் தாது மணல் நிறுவனம் அமைக்கப்படும் என முதல்வா் ஸ்டாலின் அறிவித்ததையொட்டி இந்த ஆய்வுகள் நடைபெற்ாகக் கூறப்படுகிறது.