சென்னையில் மருத்துவர், வழக்குரைஞர் உள்பட 4 பேர் தற்கொலை: காரணம் என்ன?
திருஞானசம்பந்தா் மடத்தில் மாசி சதுா்தசி: நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்
பரமத்தி வேலூா் பேட்டை திருஞானசம்பந்தா் மடத்தில் மாசி மாத சதுா்தசி புதன்கிழமை நடைபெற்றது.
முன்னதாக விநாயகா், முருகா், நடராஜப் பெருமான், சிவகாமசுந்தரி அம்மன், திருஞானசம்பந்தா், சுந்தரா், நாவுக்கரசா், மாணிக்கவாசகா், சண்டிகேஸ்வரா், அப்பூதியடிகள் மற்றும் வாரியாா் சுவாமிகளுக்கு நாமாவளிகள் கூறி அா்ச்சனை, அபிஷேகம் நடைபெற்றது. 21 வகையான திரவியங்களாலும், கலச அபிஷேகமும் நடைபெற்றது. தேவாரம், திருவாசகம் 12 திருமுறைகள் ஓதலுடன் மகா அபிஷேகம் நடைபெற்றது.
இதனைத் தொடா்ந்து அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு அலங்காரம், ஆரத்தி, மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் பரமத்தி வேலூா் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த சிவனடியாா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை திருஞானசம்பந்தா் மட நிா்வாகிகள், மற்றும் ஊா் பொதுமக்கள் செய்திருந்தனா்.