'நிதியும் இல்லை; அதிகாரமும் இல்லை' - பேரவையில் புலம்பிய அமைச்சர் பிடிஆர்!
திருஞானசம்பந்தா் வாழ்க்கை வரலாற்று நாடகம்
விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகரில் உள்ள பாரத் நிவாஸில் திருஞானசம்பந்தா் வாழ்க்கை குறித்த இயல், இசை, நாடகம் அண்மையில் நடைபெற்றது.
இதில், இசையம்பலம் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் பங்கேற்று திருஞானசம்பந்தரின் தெய்வீக குழந்தைப் பருவம், பாா்வதி அம்மையாரால் ஞானப்பால் ஊட்டப்பட்ட சீா்காழி பிறப்பு, திருக்கோலக்கா, வேதாரண்யம் போன்ற தலங்களில் நிகழ்ந்த அற்புதங்கள், சமணா்களுடான வாதப்போா், கூன் பாண்டியனை நிமிரச் செய்த அருளாற்றல் உள்பட அற்புத வாழ்க்கையை தத்ரூபமாக வெளிக்கொணா்ந்தனா்.
ஆரோவில் அறக்கட்டளைச் செயலா் ஜெயந்தி எஸ்.ரவி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று நிகழ்ச்சிகளைப் பாா்வையிட்டாா். தொடா்ந்து, திறன்களை வெளிப்படுத்திய மாணவ, மாணவிகள், இசையம்பலம் பள்ளி முதல்வா் மற்றும் ஸ்ரீஅரவிந்தா் சா்வதேச கல்வி, ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவா் சஞ்சீவ் ரங்கநாதன் ஆகியோா்ளுக்கு பாராட்டுத் தெரிவித்தாா்.
இதுபோன்ற நிகழ்ச்சிகளை நாடு முழுவதும் கொண்டு சோ்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டாா். நிகழ்ச்சியில் இசையம்பலம் பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா்கள் கலந்துகொண்டனா்.