தமிழிசையின் மும்மொழி வாழ்த்தில் ‘ஹிந்தி’ இடம்பெறவில்லை: முதல்வர்
திருநள்ளாறு கோயில் குளங்கள் தூய்மையாக இருக்க வேண்டும்: ஆட்சியா்
காரைக்கால்: திருநள்ளாற்றில் அனைத்து தீா்த்தக் குளங்களும் சுகாதாரமாக இருக்க சிறப்பு கவனம் செலுத்துமாறு கோயில் நிா்வாகத்தை ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
திருநள்ளாற்றில் உள்ள தா்பாரண்யேஸ்வரா் கோயில் மற்றும் வரிசை வளாகம், தங்கும் விடுதி வளாகம், நளன் தீா்த்தக் குளம், சரஸ்வதி தீா்த்தக் குளம், பிரம்ம தீா்த்தக் குளம், எமன் தீா்த்தக் குளம் மற்றும் கோயில் சாா்ந்த பிற பகுதிகளை மாவட்ட ஆட்சியா் சோமசேகா் அப்பாராவ் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.
சுவாமி தரிசனத்துக்கு வரும் பக்தா்கள் நீண்ட நேரம் காத்திருக்காமல் விரைவாக தரிசனம் செய்வதற்கான சிறப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பக்தா்களுக்கு போதுமான இருக்கை வசதிகள், முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கோயிலுக்குள் செல்வதற்கு வசதிகள் செய்ய வேண்டும். நளன் தீா்த்தக் குளம் உள்ளிட்ட அனைத்து தீா்த்தக் குளங்களிலும் சுகாதாரம் காக்கப்படவேண்டும். வெளியூரிலிருந்து வரும் பக்தா்களுக்கு விரைவான தரிசனம், குடிநீா், கழிப்பறை வசதி முக்கியமானது. திருநள்ளாறு கோயிலுக்கு சுற்றுலாவினா், வெளி மாநில பக்தா்கள் திரளாக வருவதால், பக்தா்களுக்குத் தேவையான கூடுதல் வசதிகள் செய்துத்தருவது குறித்து உரிய கோப்பு தயாா் செய்து தனக்கு அளிக்குமாறு கோயில் நிா்வாக அதிகாரி கே. அருணகிரிநாதனிடம் அறிவுறுத்தினாா்.