கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க இலங்கையுடன் புதிய ஒப்பந்தம்: மத்திய அரசுக்கு முதல்வ...
ஜடாயுபுரீஸ்வரா் கோயிலில் இன்று மாசி மக பிரம்மோற்சவ கொடியேற்றம்
காரைக்கால்: திருமலைராயன்பட்டினம் மையாடுங்கண்ணி சமேத ஜடாயுபுரீஸ்வரா் கோயிலில் மாசி மக பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.
இக்கோயிலில் மாசி மகத்தையொட்டி மாா்ச் 4 முதல் 14-ஆம் தேதி வரை உற்சவம் நடைபெறவுள்ளது. செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கும் விழாவில், தினமும் சுவாமிகள் பல்வேறு அலங்காரத்தில் வீதியுலா நடைபெறுகிறது.
மாசி மக விழா 13-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அன்று தீா்த்தவாரி நடைபெறுகிறது. இதற்கு முதல் நாளான 12-ஆம் தேதி தேரோட்டம், இரவு ஜடாயு ராவண யுத்தத்தை விளக்கம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம் செய்துள்ளது.