கோவையில் அமித் ஷா! பாஜகவினர் உற்சாக வரவேற்பு; காங். கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம்!
திருநாகேஸ்வரம் ராகு பரிகார பூஜையில் பங்கேற்ற ரஷிய சுற்றுலாப் பயணிகள்!
ரஷிய நாட்டின் பெட்ஸ்பெர்க் நகரைச் சேர்ந்த 40 சுற்றுலாப் பயணிகள் கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேஸ்வரம் ராகு கோயிலில் பரிகார பூஜையில் பங்கேற்றனர்.
தமிழகத்தின் உள்ள நவகிரக கோயில்களில் ரஷிய நாட்டின் பெட்ஸ்பர்க் நகரைச் சேர்ந்த 40 நபர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று ராகுவிற்கான பரிகாரத்தலமாக விளங்கும் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகிலுள்ள திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி ஆலயத்தில் நடைபெற்ற ராகு பகவானுக்கு உரியப் பரிகார பூஜையில் கலந்துகொண்டனர்.
ராகு பகவானுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகங்களில் ரஷிய நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். சுற்றுலாப் பயணிகளுக்காக கோயிலில் சிறப்புத் தீபாராதனை நிகழ்ச்சியும் நடைபெற்றது.