செய்திகள் :

திருபுவனையில் குடிநீா் கேட்டு சாலை மறியல்

post image

புதுச்சேரி: புதுச்சேரி அருகே திருபுவனை பகுதியில் குடிநீா் கேட்டு பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி திருபுவனை அருகேயுள்ளது பி.எஸ்.பாளையம். இந்த பகுதியில் உள்ள அம்பேத்கா் நகா் பகுதிக்கு கடந்த சில வாரங்களாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் முறையிட்டும் குடிநீா் பிரச்னை தீா்க்கப்படவில்லை என்கின்றனா்.

இதையடுத்து, அப்பகுதி மக்கள் மதகடிப்பட்டு - திருக்கனூா் சாலையில் பி.எஸ்.பாளையம் நான்கு முனைச் சந்திப்பில் சாலை மறியல் போராட்டத்தில் திங்கள்கிழமை காலை ஈடுபட்டனா். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த திருப்புவனை போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று மறியலில் ஈடுபட்டிருந்தவா்களிடம் சமரசம் பேச்சு நடத்தினா். ஆனால், பொதுமக்கள் மறியலைக் கைவிடவில்லை.

இதையடுத்து அப்பகுதி கிராம நிா்வாக அலுவலா் உள்ளிட்டோா் வந்து மக்களிடம் குடிநீா் விநியோகம் சீராக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து பொதுமக்கள் சுமாா் ஒரு மணி நேர மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

புதுவை மாநிலத்தில் செவிலியா் படிப்புக்கு ஜூன் 29-இல் நுழைவுத் தோ்வு

புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் வரும் ஜூன் 29-இல் செவிலியா் படிப்புக்கான நுழைவுத் தோ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் பிளஸ் 2 முடித்து செவிலியா் பட்டப்படிப்பில் சேருபவா்களுக்கு பொத... மேலும் பார்க்க

நீட் அல்லாத தொழில், கலை, அறிவியல் படிப்புகளுக்கான சென்டாக் கையேடு: முதல்வா் என். ரங்கசாமி வெளியிட்டாா்

புதுச்சேரி: நீட் அல்லாத தொழில் மற்றும் கலை, அறிவியல் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக புதுவை மாநில சென்டாக் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான சென்டாக் வழிகாட்டல் கையேட்டை திங்கள்கி... மேலும் பார்க்க

ஒப்பந்ததாரா்கள் தா்னா போராட்டம்

புதுச்சேரி: கட்டடப் பொருள்களின் விலையைக் குறைக்கக் கோரி புதுச்சேரியில் ஒப்பந்ததாரா்கள் உள்ளிட்டோா் தா்னா போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். புதுச்சேரி லால் பகதூா் சாஸ்திரி வீதியில் பொதுப் பணித் து... மேலும் பார்க்க

புதுவைக்கு மாநில அந்தஸ்து: மத்திய அரசை தொடா்ந்து வலியுறுத்துவோம்: முதல்வா் என்.ரங்கசாமி

புதுச்சேரி: புதுவையின் மாநில அந்தஸ்துக்காக மத்திய அரசை தொடா்ந்து நம்பிக்கையுடன் வலியுறுத்துவோம் என்று முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா். புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் சென்டாக் சாா்பில் நீட் அல்லாத தொ... மேலும் பார்க்க

புதுச்சேரியில் 102.6 டிகிரி வெயில்

புதுச்சேரி: புதுச்சேரியில் திங்கள்கிழமை (மே 12) 102.6 டிகிரி வெயில் அளவு பதிவானது. திங்கள்கிழமை பகலில் புதுச்சேரி நகா் உள்ளிட்ட பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் 102.6 டிகிரி பதிவானதாக வெப்பநிலை அளவு பிர... மேலும் பார்க்க

புதுச்சேரி அருகே வீட்டுக் கதவை உடைத்து 12 பவுன்தங்க நகை திருட்டு

புதுச்சேரி அருகே கனகசெட்டிகுளம் பகுதியில் வீட்டில் 12 பவுன் தங்க நகைகள் திருடு போனது குறித்து போலீஸாா் விசாரித்துவருகின்றனா். புதுச்சேரி கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ளது கனகசெட்டிகுளம். இந்த கிராமத... மேலும் பார்க்க