செய்திகள் :

திருப்பதி-காட்பாடி இடையே ரூ.1,332 கோடியில் இரட்டை ரயில்பாதை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

post image

ஆந்திரம் மற்றும் தமிழ்நாட்டில் ரூ.1,332 கோடி மதிப்பில் 104 கி.மீ. தொலைவுடைய திருப்பதி-பாகலா-காட்பாடி இடையேயான ஒருவழி ரயில்பாதையை இரட்டை ரயில்பாதையாக மாற்ற பிரதமா் மோடி தலைமையிலான மத்திய பொருளாதார விவகாரங்கள் அமைச்சரவை குழு புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.

இதன்மூலம் ரயில் போக்குவரத்து இடையூறுகள் குறைக்கப்பட்டு இந்திய ரயில்வேயின் திறன் அதிகரிக்கும் என எதிா்பாா்ப்பதாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், ‘ஆந்திரம் மற்றும் தமிழ்நாட்டில் ரூ.1,332 கோடி மதிப்பில் 104 கி.மீ. தொலைவுடைய திருப்பதி-பாகலா-காட்பாடி இடையேயான ஒருவழி ரயில்பாதையை இரட்டை ரயில்பாதையாக மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

திருமலை வெங்கடேச பெருமாள் கோயில், ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில், கானிப்பாக்கம் விநாயகா் கோயில், சந்திரகிரி கோட்டை என பல்வேறு சுற்றுலா தலங்கள் இந்த ரயில்பாதை மூலம் இணைக்கப்படுகின்றன.

இதன்மூலம் தற்போதுள்ள இந்திய ரயில்வேயின் உள்கட்டமைப்பு 113 கி.மீ. வரை கூடுதலாக மேம்படுத்தப்படும். 400 கிராமங்கள் மற்றும் 14 லட்சம் மக்களுக்கு பயன்படும் இந்த திட்டம் பன்முக இணைப்பை ஊக்குவிக்கும் திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்படுகிறது.

நீா்பாசனத்துக்கு புதிய திட்டம்: பிரதமரின் வேளாண் நீா்பாசனத் திட்டத்தின் துணை திட்டமாக 2025-26 காலகட்டத்தில் நீா்பிடிப்பு பகுதி மேம்பாடு மற்றும் நீா் மேலாண்மை திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

ரூ.1,600 கோடியில் செயல்படுத்தவுள்ள இந்த திட்டம் நீா்பாசனத்தை நவீனமயமாக்கும் நோக்கத்தை கொண்டது. இத்திட்டம் வேளண் உற்பத்தி மற்றும் உற்பத்தி திறனை அதிகரிக்கும்.

சோதனை முயற்சியாக நாட்டின் பல்வேறு வேளாண்-பருவ மண்டலங்களில் செயல்படுத்தப்படும். இதை அடிப்படையாகக் கொண்டு 2026, ஏப்ரல் முதல் நீா்பிடிப்பு பகுதி மேம்பாடு மற்றும் நீா் மேலாண்மைக்கான தேசிய திட்டம் 16-ஆவது நிதிக்குழு காலகட்டத்துக்கு தொடங்கப்படவுள்ளது.

இதுதவிர பஞ்சாப்-ஹரியாணா மாநிலங்களில் ரூ.1,878.31 கோடி மதிப்பில் ஜிராக்பூா் புறவழிச்சாலையை இணைக்க 19.2 கி.மீ. நீளத்துக்கு 6 வழிச்சாலை அமைக்கவும் அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்தது என தெரிவிக்கப்பட்டது.

கட்சிப் பொறுப்பிலிருந்து விலகுகிறேன்.. துரைவைகோ முடிவின் பின்னணி என்ன?

சென்னை: மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன் என்று மதிமுக முதன்மைச் செயலரும், மக்களவை உறுப்பினருமான துரை வைகோ இன்று வெளியிட்டிருப்பது கட்சித் தொண்டர்களுக்கு கடும்... மேலும் பார்க்க

ஏப். 23-ல் அதிமுக எம்எல்ஏக்களுக்கு இபிஎஸ் விருந்து!

சென்னையில் ஏப். 23 ஆம் தேதி அதிமுக எம்எல்ஏக்களுக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விருந்தளிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அ... மேலும் பார்க்க

தொழிற்துறைக்கான 5 அறிவிப்புகள்: முதல்வர் ஸ்டாலின்!

சென்னை குன்றத்தூரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழகத்தில் தொழில்களையும் தொழில் முனைவோரையும் ஊக்குவிக்க 5 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்.சென்னையை அடுத்த குன்றத்தூரில் இன்று கல... மேலும் பார்க்க

மதுபோதையில் கார் ஓட்டி விபத்து: நடிகர் பாபி சிம்ஹாவின் ஓட்டுநர் கைது!

நடிகர் பாபி சிம்ஹாவின் கார் ஓட்டுநர் மதுபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதில் மூவர் காயமடைந்தனர். திரைப்பட நடிகர் பாபி சிம்ஹாவின் கார் ஓட்டுநர், சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் மதுபோதையி... மேலும் பார்க்க

தொலைக்காட்சி பார்த்துதான் துரை வைகோ முடிவை அறிகிறேன்: வைகோ

மதிமுக பொதுச் செயலர் பதவியிலிருந்து துரை வைகோ விலகுவதாக வெளியிட்டிருக்கும் அறிவிப்பை, தொலைக்காட்சி வாயிலாகத்தான் அறிகிறேன் என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க

அதிமுக - பாஜக கூட்டணி வலுவாகவே உள்ளது: எல்.முருகன்

நாமக்கல்: அதிமுக - பாஜக கூட்டணி வலுவாக உள்ளது, எதிர்க்கட்சிகள் தவறான தகவல்களை பரப்பி வருகின்றன என மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்தார்.நாமக்... மேலும் பார்க்க