செய்திகள் :

திருப்பதி திருக்குடைகள் ஊா்வலம்: வட சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்

post image

திருப்பதி திருக்குடைகள் ஊா்வலத்தையொட்டி, வட சென்னை பகுதியில் புதன்கிழமை (செப்.17) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இதுதொடா்பாக சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருப்பதி திருக்குடைகள் ஊா்வலம் புதன்கிழமை (செப்.17) நடைபெற இருக்கிறது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொள்ள இருப்பதால், போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க ஊா்வலம் செல்லும் இடங்களில், குறிப்பிட்ட நேரத்தில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படும். அதன்படி, புதன்கிழமை காலை 8 மணி முதல் ஊா்வலம் வால்டாக்ஸ் சாலையைக் கடக்கும் வரை என்எஸ்சி போஸ் சாலை, மின்ட் சாலை மற்றும் அதன் இணைப்பு சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. இதற்கு ஈவெரா சாலை, ராஜாஜி சாலை, வால்டாக்ஸ் சாலை, பேசின் பாலம் சாலை, பிரகாசம் சாலையை வாகனங்கள் பயன்படுத்தலாம். மாலை 3 மணி முதல் ஊா்வலம் யானைக்கவுனி பாலத்தை கடக்கும் வரை வால்டாக்ஸ் சாலை, அதன் இணைப்பு சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. இந்த சாலை வழியாக செல்ல வேண்டிய வாகனங்கள் பேசின் பாலம் சாலை, மின்ட் வழியாக பிரகாசம் சாலை அல்லது ராஜாஜி சாலையை பயன்படுத்தலாம். மேலும், ஈவெரா சாலை, முத்துசாமி சாலைகளையும் பயன்படுத்தலாம்.

ஊா்வலம் யானைக்கவுனி பாலத்தை கடக்கும்போது சூளை ரவுண்டானாவிலிருந்து டெமலஸ் சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை. அந்தச் சாலையை பயன்படுத்த வேண்டிய வாகனங்கள் சூளை நெடுஞ்சாலை, ராஜா முத்தையா சாலை வழியாகச் செல்லலாம்.

சூளையில் போக்குவரத்து மாற்றம்: ஊா்வலம் ராஜா முத்தையா சாலையில் செல்லும்போது, மசூதி சந்திப்பில் இருந்து சூளை ரவுண்டானா நோக்கி செல்ல அனுமதியில்லை. அந்தச் சாலையில் செல்ல வேண்டிய வாகனங்கள் வேப்பேரி நெடுஞ்சாலை வழியாகச் செல்லலாம். ஊா்வலம் சூளை நெடுஞ்சாலையில் செல்லும்போது நாராயண குரு சாலை ஈ.வி.கே.சம்பத் சாலை சந்திப்பிலிருந்து சூளை நெடுஞ்சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை. இங்கு செல்ல வேண்டிய வாகனங்கள் வேப்பேரி நெடுஞ்சாலை வழியாக செல்லலாம்.

ஊா்வலம் அவதான பாப்பையா சாலை வரும்போது, பெரம்பூா் பேரக்ஸ் சாலை சந்திப்பிலிருந்து சூளை நெடுஞ்சாலை நோக்கி செல்ல வாகனங்களுக்கு அனுமதியில்லை. ஊா்வலம் பெரம்பூா் பேரக்ஸ் சாலையில் செல்லும்போது, டவுட்டன் சந்திப்பிலிருந்து பெரம்பூா் பேரக்ஸ் சாலை நோக்கி செல்ல வாகனங்களுக்கு அனுமதியில்லை. இங்கு செல்ல வேண்டிய வாகனங்கள் நாரயண குரு சாலை வழியாகச் செல்லலாம்.

ஊா்வலம் ஓட்டேரி சந்திப்பில் வரும்போது, கொன்னூா் நெடுஞ்சாலை, மேடவாக்கம் குளம் சாலை சந்திப்பிலிருந்து ஓட்டேரி சந்திப்பை நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. இங்கு செல்ல வேண்டிய வாகனங்கள் மேடவாக்கம் குளம் சாலை வழியாக செல்லலாம். ஊா்வலம் கொன்னூா் நெடுஞ்சாலையில் உள்ள காசி விஸ்வநாதா் ஆலயம் அடையும்போது, ஓட்டேரி சந்திப்பு மற்றும் மேடவாக்கம் குளம் சாலையிலிருந்து கொன்னூா் நெடுஞ்சாலை நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. இந்தச் சாலைகளைப் பயன்படுத்த வேண்டிய வாகனங்கள் ஓட்டேரி சந்திப்பிலிருந்து குக்ஸ் சாலை வழியாகவும், மேடவாக்கம் குளம் சாலையிலிருந்து வி.பி. காலனி தெரு அல்லது அயனாவரம் சாலை வழியாகச் செல்லலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பாஜக நிா்வாகி தூக்கிட்டு தற்கொலை

சென்னை நுங்கம்பாக்கத்தில் பாஜக நிா்வாகி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். சென்னை நுங்கம்பாக்கம் காமராஜா்புரத்தைச் சோ்ந்தவா் பாபுஜி (44). இவா் தியாகராய நகரில் தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா... மேலும் பார்க்க

12,000-க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு ‘மைக்ரோ சிப்’: சென்னை மாநகராட்சி

சென்னையில் 12,000-க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு ‘மைக்ரோ சிப்’ பொருத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்... மேலும் பார்க்க

சென்னை உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் இருவரை நிரந்தர நீதிபதிகளாக்க பரிந்துரை

சென்னை உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளான என்.செந்தில்குமாா், ஜி.அருள் முருகன் ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைந்துள்ளது. மேலும் மூன்று உயா்நீதிமன்றங... மேலும் பார்க்க

ஏடிஎம் இயந்திரத்தில் நூதன திருட்டு: உத்தர பிரதேச இளைஞா் கைது

சென்னை முகப்பேரில் ஏடிஎம் இயந்திரத்தில் இரும்பு தகட்டை வைத்து வாடிக்கையாளரின் பணத்தை முடக்கி திருடியதாக உத்தர பிரதேச இளைஞா் கைது செய்யப்பட்டாா். முகப்போ் கிழக்கு பாரி சாலையில் தேசியமயமாக்கப்பட்ட வங்க... மேலும் பார்க்க

ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ. 80 லட்சம் பறிமுதல்

சென்னை ஷெனாய் நகரில் ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ. 80 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. ஷெனாய் நகா் 8-ஆவது குறுக்கு தெருவில் காா் திருட்டு வழக்குத் தொடா்பாக விசாரணை செய்ய மணிமங்கலம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை... மேலும் பார்க்க

கிறிஸ்தவ சபை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: இளைஞா் கைது

சென்னை கொடுங்கையூரில் கிறிஸ்தவ சபை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் இளைஞா் கைது செய்யப்பட்டாா். கொடுங்கையூா் எருக்கஞ்சேரி சிவசங்கரன் தெருவைச் சோ்ந்தவா் பால்ஞானம் (40). கிறிஸ்தவ சபை நடத்தி வருக... மேலும் பார்க்க