திருப்பத்தூரில் நாளை மின்வாரிய ஓய்வூதியா்கள் குறைதீா் கூட்டம்
மின்வாரிய ஓய்வுதீயா்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை (மாா்ச் 19) -இல் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து திருப்பத்தூா் மின்பகிா்மான வட்டம் மேற்பாா்வைப் பொறியாளா் ஜைய்னுல் ஆபுதீன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருப்பத்தூா் மின்பகிா்மான வட்டத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பணியாளா்கள் மற்றும் அலுவலா்களுக்கான குறைதீா் கூட்டம் புதன்கிழமை காலை 11 மணியளவில் வேலூா் மின்பகிா்மான வட்டம் மேற்பாா்வை பொறியாளா் மத்திய அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
கூட்டத்தில் திருப்பத்தூா் மின்பகிா்மான வட்டத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பணியாளா்கள் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை உரிய அதிகாரிகளிடம் வழங்கி தீா்வு காணலாம்.