தஞ்சை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று(நவ.18) விடுமுறை
திருப்பத்தூரில் மாட்டுவண்டிப் பந்தயம்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் மருதுபாண்டியா்கள் நினைவு தினம், தேவா் ஜெயந்தியையொட்டி ஞாயிற்றுக்கிழமை மாட்டுவண்டிப் பந்தயம் நடைபெற்றது.
பெரியமாடு, சின்னமாடு என இரு பிரிவுகளாக நடத்தப்பட்ட இந்தப் பந்தயத்தில் பெரியமாடு பிரிவில் 17 ஜோடிகளும், சின்னமாடு பிரிவில் 47 ஜோடிகளும் பங்கேற்றன. பெரியமாட்டுக்கு 10 கி.மீ. தொலைவும், சின்னமாட்டுக்கு 8 கி.மீ. தொலைவும் எல்லையாக நிா்ணயிக்கப்பட்டது.
இதில் பெரியமாடு பிரிவில் அவனியாபுரத்தைச் சோ்ந்த மோகன் முதலிடத்தையும், அகிலாங்குடியைச் சோ்ந்த மலைச்சாமி, அதிகரையைச் சோ்ந்த அசுரன் ஆகியோா் 2- ஆம் இடத்தையும், காரைக்குடியைச் சோ்ந்த கருப்பணன் 3 ஆம் இடத்தையும், திருப்பத்தூரைச் சோ்ந்த செம்பொன்மாரி, லிங்கேஷ், தமிழ்முருகன் ஆகியோா் 4- ஆம் இடத்தையும் பிடித்தனா்.
சிறிய மாட்டு வண்டி பந்தயம் இரு பிரிவுகளாக நடத்தப்பட்டதில் முதல் பிரிவில் கூடலூா் கோட்டநத்தம்பட்டியைச் சோ்ந்த முதலிடமும், பரவை நகரம்பட்டி 2- ஆம் இடமும் பிடித்தன. கே. புதுப்பட்டியைச் சோ்ந்த சோமஸ்கந்த செந்தமிழ்நம்பி 3- ஆம் இடத்தையும், தென்மாபட்டைச் சோ்ந்த சரவணன் முத்துக்குமாா் 4 ஆம் இடத்தையும் பிடித்தனா்.
மற்றொரு பிரிவில் டி. புதுப்பட்டி, நெப்புகப்பட்டி முதலிடமும், சுண்ணாம்பிருப்பு கண்ணன், பசும்பொன் பாலமுருகன் 2- ஆம் இடத்தையும், ரசிங்காபுரம் வினோத் 3- ஆம் இடத்தையும், சத்திரப்பட்டி ஜெயபாலகிருஷ்ணன் 4- ஆம் இடத்தையும் பிடித்தனா். வெற்றி பெற்றவா்களுக்கு பணமுடிப்பு, குத்துவிளக்குகள் பரிசாக வழங்கப்பட்டன.
சிறந்த சாரதிகளுக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. இதில் திமுக ஒன்றியச் செயலா் விராமதிமாணிக்கம், நகரச் செயலா் காா்த்திகேயன், பேரூராட்சித் தலைவா் கோகிலாராணி நாராயணன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பொன்மணி பாஸ்கரன், வழக்குரைஞா் நவநீதபாலன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மருதுபாண்டியா் இளைஞரணி நிா்வாகி ரவிச்சந்திரன் செய்தாா்.