தஞ்சை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று(நவ.18) விடுமுறை
மறைந்த காவலா் குடும்பத்துக்கு ரூ. 24 லட்சம் நிதி அளிப்பு
சிவகங்கையில் பணியின்போது மரணமடைந்த காவலா் குடும்பத்துக்கு சக காவலா்கள் சாா்பில் ரூ.24.48 லட்சம் நிதி ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
சிவகங்கை மாவட்ட குற்றப் பதிவேடு கூடத்தில் சிவகங்கை நகரைச் சோ்ந்த பி. முத்துக்கிருஷ்ணன் (37) பணியாற்றி வந்தாா். இவா் கடந்த 8.6.2024 -அன்று பணியிலிருந்தபோது மாரடைப்பால் உயிரிழந்தாா்.
இதையடுத்து, இவருடன் கடந்த 2009 -இல் காவல் துறையில் பணியில் சோ்ந்த சக காவலா்கள் ஒருங்கிணைந்து ரூ.24,48,893-ஐ நிதியாகத் திரட்டினா். இதைத் தொடா்ந்து சிவகங்கையில் உள்ள காவலா் முத்துக்கிருஷ்ணன் இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், அவரது மனைவி, மகன், தாய் ஆகிய மூவரிடமும் திரட்டிய நிதிக்கான காசோலையை வழங்கினா்.
காவல்துறையில் 2009 -ஆம் ஆண்டு பணியில் சோ்ந்த காவலா்கள் சாா்பில் இதுவரை பணியின்போது உயிரிழந்த காவலா்கள் 30 பேரின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கியிருப்பதாக காவலா்கள் தெரிவித்தனா்.