செய்திகள் :

திருப்பத்தூர்: சிதிலடமடைந்த சிலைக்கு அடியில் பேருந்துக்காக தஞ்சமடையும் மக்கள்; ஆபத்தை உணருமா அரசு?

post image

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த கோடியூரில்‌ அமைந்துள்ளது இந்த இடம். வாணியம்பாடி, ஆம்பூர் ,வேலூர் மற்றும் பிற ஊர்களுக்குச் செல்வதற்காகப் பயணிகள் இங்கு நின்று பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். இந்த கோடியூர் பகுதியைச் சுற்றி அரசு ஆரம்பச் சுகாதார நிலையம், அரசுப் பள்ளிகள், வங்கி உள்ளிட்ட முக்கிய நிறுவனங்கள் அமைந்துள்ளன. இதனால் பொதுமக்கள், மாணவர்கள், முதியோர் ஆகியோர் இங்கு அதிக அளவில் வந்து செல்லும் நிலை உள்ளது. ஆனால் இவ்வளவு முக்கியமான இடத்தில் பயணிகள் நிழற்குடை இல்லாததால் மக்கள் பல்வேறு சிரமங்களைச் சந்திக்கின்றனர். மேலும் சிதிலமடைந்த சிலை ஒன்றின் கீழ் பேருந்துகளுக்காக பயணிகள் காத்துக் கிடக்கின்றனர்.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர்கள், ``இந்த இடம் பல வருடங்களாகவே இப்படித்தான் உள்ளது. எந்த அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. நாங்களும் இந்த விவகாரம் குறித்துப் பலமுறை‌ எடுத்துக் கூறியுள்ளோம். ஆனால் எந்த நடவடிக்கையும் இதுவரையும் எடுக்கப்படவில்லை. அப்போதைய ஜோலார்பேட்டை ஒன்றிய அரசியல் நிர்வாகிகள் இங்கு நிழற்குடை கட்ட வழிவகை செய்கிறோம் என்றார்கள். ஆனால் ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை." என்றனர்.

இது குறித்து அங்குப் பயணம் மேற்கொண்டு வருபவர்களிடம் விசாரித்தபோது, ``இந்த இடத்தில் எப்பொழுதும் கூட்டமாக நின்றுதான் பேருந்து ஏறுவோம். காலை மற்றும் மாலை நேரங்களில் மாணவர்கள், மருத்துவமனைக்கு வருபவர்கள் அனைவருமே இந்தச் சிலையின் அடியில் தஞ்சம் அடைந்து தான் பயணம் மேற்கொண்டு வருகிறோம்.

சமீபத்தில் கார் ஒன்று வேகமாகச் சென்று கொண்டிருந்த போது அங்கு நின்று‌கொண்டிருந்த முதியவரை மோதிச் சென்றுவிட்டது. மேலும் சிலையின் மேற்கூரை இடிந்து 11ம் வகுப்பு மாணவி மீது விழுந்தது. ஆனால் உயிருக்கு எந்த ஆபத்தும் நேராமல் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார். 

இங்கு நிழற்குடை கட்டி தரமால் இருந்தாலும் பரவாயில்லை... பேருந்து நிறுத்தத்தையாவது மாற்றித் தர வேண்டும். சாலையில் வரும் வண்டி இடித்து விடுமோ... இல்லை இந்த கூறை விழுந்து விடுமோ என்று அச்சத்துடனே இங்கு நிற்க வேண்டியிருக்கிறது" என்றனர். 

மழைக்காலம் என்பதால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி உடனடியாக இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்து விரைந்து தீர்வு காண வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் பயணிகள் தமிழக அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளனர்.

Maharastra: 'பிரதமரின் முடிவே இறுதி!' - முதல்வர் பதவி குறித்து ஏக்நாத் ஷிண்டே சொல்வதென்ன?

மகாராஷ்டிரா மாநில முதல்வர் பதவி குறித்து பாஜக மேலிடம்தான் இறுதி முடிவு எடுக்கும் என்று சிவசேனா தலைவரும் இடைக்கால முதல்வருமான ஏக்நாத் ஷிண்டே தெரிவித்திருக்கிறார்.மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜ... மேலும் பார்க்க

'கலைஞரை வாதத்தில் வென்ற உதயநிதி' - வைரமுத்து பகிர்ந்த வாழ்த்து!

திமுக இளைஞரணித் தலைவரும் தமிழகத்தின் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் இன்று பிறந்தநாள் கொண்டாடுகிறார்.கட்சித் தொண்டர்கள் பிறந்தநாள் விழாக்களைக் கொண்டாடிவரும் நிலையில், அரசியல் தலைவர்களும் அவருக்கு வா... மேலும் பார்க்க

ராமதாஸ் விவகாரம்: `அவர் மட்டும் முதல்வரை அப்படி பேசலாமா... அது சரியா?' - எம்.பி திருச்சி சிவா கேள்வி

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் நாளே எதிர்க்கட்சிகள், அதானி விவகாரத்தை கையில் எடுத்தன. இதனால் நேற்று இரு அவைகளும் முடங்கியது. தொடர்ந்து இன்றும் இரு அவைகளிலும... மேலும் பார்க்க

``ஆடிட்ல என்ன சொல்லப்போறாங்கன்னு...'' - சி.ஏ.ஜியின் நிகழ்ச்சியில் அப்பாவு

அக்கவுன்டன்ட் ஜெனரல் எனப்படும் இந்திய கணக்குத் தணிக்கைத் துறை ஆண்டுதோறும் நவம்பர் மூன்றாவது வாரத்தில் கொண்டாடும் ’தணிக்கை வார’ விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் எம்.அப்பாவு... மேலும் பார்க்க

அமெரிக்கா: NIH இயக்குநராக இந்திய வம்சாவளியை டிக் செய்த ட்ரம்ப் - யார் இந்த பட்டாச்சார்யா?!

அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்ப், இந்திய-அமெரிக்க மருத்துவரும், பொருளாதார நிபுணருமான டாக்டர் ஜெய் பட்டாச்சார்யாவை, நாட்டின் தலைசிறந்த சுகாதார ஆராய்ச்சி மற்றும் நிதியளிப்பு நிறுவ... மேலும் பார்க்க