ஒவ்வொரு குடிமகனையும் காப்பது அரசின் கடமை: கிறிஸ்துமஸ் விழாவில் பிரதமர்!
திருப்பத்தூர்: மக்கள் அச்சத்தை கவனப்படுத்திய விகடன்; நீர்த்தேக்கத் தொட்டியைச் சீரமைத்த அதிகாரிகள்!
திருப்பத்தூர் மாவட்டம், தாமலேரி முத்தூர் பகுதியில், 1-வது வார்டில் அமைந்துள்ளது மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டி அமைந்திருக்கிறது. அந்தப் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த ஊரில் அமைந்துள்ள நீர்த்தேக்கத் தொட்டி 60 ஆயிரம் லிட்டர் கொள்ளவைக் கொண்டது. இதைக்கட்டி முப்பது வருடங்களுக்கு மேலான நிலையில், அந்த நீர்த்தேக்கத் தொட்டி மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் நம்மிடம் கூறுகையில், ``இந்த இடம் எப்போதும் பரபரப்பாகத்தான் இருக்கும். விடுமுறை நாட்களில் குழந்தைகள், மாணவர்கள் என அனைவரும் இவ்விடத்தைச் சூழ்ந்து விளையாடிக் கொண்டிருப்பார்கள். ஊர் பொதுக்கூட்டங்கள், இளைஞர்கள் ஒன்று கூடுவது எல்லாமே இங்குதான். இந்நிலையில் இந்த நீர்த்தேக்கத் தொட்டியின் பில்லர்கள் தற்போது மோசமான நிலையில் உள்ளதால் பார்க்கும் போதெல்லாம் கண்ணுக்கு உறுத்தலாகவே இருந்து வருகிறது. ஆனால் நீர்த்தேக்கத் தொட்டி பயன்பாட்டில் தான் உள்ளது. இந்தத் தொட்டியையொட்டி பல வீடுகள் அமைந்துள்ளது. இடிந்து விழுந்தால் என்ன ஆகும் என்றே தெரியாது. கடந்த சில தினங்களாகவே ஒருவித பயத்தோடுதான் எங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி வருகிறோம். தூண்களில் சிமென்ட் காரையெல்லாம் பெயர்ந்து கம்பி வெளியே தெரிகிறது. ஆனால் தொட்டியின் மேற்புறம் அவ்வளவு பாதிப்பு இல்லை... நன்றாகத்தான் இருக்கிறது. எப்போது இடிந்து விழுமென்று சொல்ல முடியாத நிலையில் இருக்கிறது. பெரிய தொட்டி என்பதால், விழுந்தால் பெரிய பாதிப்பு ஏற்படும். நாங்களும் ஒரு சில மாதங்களுக்கு மேலாக இந்த பில்லர்களை முறையாகச் சீரமைத்துத் தர வேண்டி போராடிக் கொண்டிருக்கிறோம்" என்றனர்.
இது தொடர்பாக அங்கு இருக்கும் அப்பகுதி மக்களிடம் விசாரித்து, (12/12/2024) விகடன் தளத்தில் `பழுதடைந்திருக்கும் நீர்த்தேக்க தொட்டி; அச்சத்தில் மக்கள்- நடவடிக்கை எடுக்கப்படுமா?' என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். மேலும் இந்த விவகாரத்தை அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு சென்றிருந்தோம். ``இது போன்று இருப்பதே எங்கள் கவனத்திற்கு வரவில்லை. விகடன் மூலம் தெரிவித்ததற்கு நன்றி. தொட்டியினை விரைந்து சீரமைக்க ஏற்பாடு செய்கிறோம்" என்றார்கள்.
அதன் எதிரோலியாக அதிகாரிகள் களத்தில் இறங்கி நீர்தேக்க தொட்டியின் பில்லர்களை விரைந்து சரிசெய்துள்ளார்கள்.