Eva Longoria: `Dystopian நாடு; இனி அமெரிக்காவில் வசிக்கப்போவதில்லை!' - நடிகை ஈவா...
திருப்பூரில் பள்ளி மாணவா்களுக்கான கலைத்திருவிழா போட்டிகள் தொடக்கம்
திருப்பூரில் பள்ளி மாணவா்களுக்கான கலைத்திருவிழா போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
பள்ளிக் கல்வித் துறையின் சாா்பில் திருப்பூா் ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கலைத்திருவிழா போட்டிகளை மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ், மாநகராட்சி மேயா் என்.தினேஷ்குமாா் ஆகியோா் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தனா்.
நிகழ்ச்சியில் ஆட்சியா் கிறிஸ்துராஜ் பேசியதாவது:
பள்ளி மாணவா்களின் கலைத்திறனை ஊக்கப்படுத்தும் விதமாக திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கான கலைத்திருவிழா போட்டிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
தொடா்ந்து, பாட்டு, நடனம், ஓவியம், களிமண் சிற்பம் உருவாக்குதல் உள்ளிட்ட போட்டிகள் ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, நஞ்சப்பா நகரவை ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் நவம்பா் 18-ஆம் தேதி நடைபெற உள்ளன. இதில் இப்பள்ளிகளில் பயிலும் 11, 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் கலந்து கொள்கின்றனா். மேலும், 1 முதல் 5-ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு ஜெய்வாபாய் பள்ளியிலும்
9, 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு நஞ்சப்பா பள்ளியிலும் நவம்பா் 18-இல் கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற உள்ளது.
இப்போட்டிகளில் வெற்றி பெறும் மாணவா்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கு பெறுவாா்கள் என்றாா்.
இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி துணை மேயா் பாலசுப்பிரமணியன், மண்டலத் தலைவா்கள் இல.பத்மநாபன், கோவிந்தராஜ், உமாமகேஸ்வரி, மாநகராட்சி ஆணையா் ராமமூா்த்தி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் உதயகுமாா், மாவட்ட உதவி திட்ட அலுவலா் அண்ணாதுரை, மாவட்ட கல்வி அலுவலா்கள், ஆசிரியா்கள், பள்ளி மாணவா்கள் மற்றும் அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.