`அசைவ உணவு சாப்பிட விடாமல் காதலன் துன்புறுத்தல்?' - ஏர் இந்தியா பெண் பைலட் மும்ப...
திருப்பூரில் மதுபோதையில் தொழிலாளா்கள் மோதல்
திருப்பூா் மத்திய பேருந்து நிலையம் பகுதியில் மது போதையில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.
திருப்பூா் மத்திய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள தனியாா் உணவகத்தில் 20-க்கும் மேற்பட்ட வெளிமாநிலத் தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். தீபாவளி விடுமுறை நாள் என்பதால் 3 வெளிமாநிலத் தொழிலாளா்கள் அருகில் உள்ள தனியாா் மதுபான கூடத்தில் மது அருந்தி உள்ளனா். அங்கு தமிழக இளைஞா்கள் 7 போ் மது அருந்திக் கொண்டிருந்தனா். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இதில் மதுபான கூடத்தில் இருந்து வெளியேறிய இரு தரப்பினரும் ஒருவரை ஒருவா் கடுமையாக தாக்கிக் கொண்டனா்.
பின்னா் அந்தப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினா் வருவதை அறிந்து வெளிமாநிலத் தொழிலாளா்கள் உணவகத்தின் உள்ளே சென்று கதவை தாழிட்டுக் கொண்டனா். மது போதையில் இருந்த தமிழக இளைஞா்கள் நீண்ட நேரம் கதவை தட்டிப்பாா்த்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனா்.
இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் அச்சமடைந்தனா். மோதலின்போது தூக்கி வீசப்பட்ட கல் அருகில் இருந்த பேக்கரி கடைக்குள் சென்று விழுந்தது. இதில் பேக்கரியில் இருந்த பொருள்கள் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடா்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலை தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.