செய்திகள் :

திருப்பூருக்கு ரயிலில் வந்த 16 வயது சிறுமிகள் 5 போ் மீட்பு

post image

ஜாா்க்கண்ட் மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் திருப்பூா் வந்த 16 வயது சிறுமிகள் 5 பேரை ரயில்வே போலீஸாா் மீட்டனா்.

பிகாா், ஒடிஸா, மேற்கு வங்கம், அஸ்ஸாம், ஜாா்க்கண்ட், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 23 மாநிலங்களில் இருந்து தினசரி ஆயிரக்கணக்கான தொழிலாளா்கள் வேலை தேடி ரயில் மூலம் திருப்பூருக்கு வருகின்றனா்.

இவ்வாறு வரும் தொழிலாளா்கள் பின்னலாடை உற்பத்தி மற்றும் அதனைச் சாா்ந்த நிறுவனங்களில் தங்கிப் பணியாற்றி வருகின்றனா்.

இந்நிலையில், ஜாா்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருந்து தன்பாத் விரைவு ரயிலில் 5 சிறுமிகள் மாா்ச் 6 ஆம் தேதி திருப்பூருக்கு வந்தடைந்தனா். ரயில் நிலையத்தில் சிறுமிகளின் ஆதாா் அட்டைகளை ரயில்வே போலீஸாா் சோதனை செய்தனா். இதில், 18 வயது என்று குறிப்பிடப்பட்டிருந்ததால் சந்தேகமடைந்து விசாரணை நடத்தியதில் 16 வயதான சிறுமிகள் என்பது தெரியவந்தது. இவா்கள் 5 பேரும் ராஞ்சி ரயில் நிலையம் அருகே உள்ள இன்டா்நெட் மையத்தில் ஆதாா் அட்டைகளில் வயதை திருத்தம் செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து ரயில்வே போலீஸாா் திருப்பூா் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலகத்துக்குத் தகவல் கொடுத்தனா். இதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள் 5 பேரையும் மீட்டு கொங்கு நகா் பகுதியில் உள்ள காப்பகத்தில் தங்க வைத்தனா்.

மேலும், சிறுமிகளின் பெற்றோரையும் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வரவழைத்தனா். அதன்பின், மாவட்ட குழந்தைகள் நலக்குழுவிடம் சிறுமிகளை ஆஜா்படுத்தி பெற்றோரிடம் ஒப்படைக்கவுள்ளதாக மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலா்கள் தெரிவித்தனா்.

குழந்தைத் திருமணம்: சிறுமி மீட்பு

திருப்பூா் அருகே பெற்றோரால் திருமணம் செய்துவைக்கப்பட்ட 17 வயது சிறுமியை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலா்கள் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா். திருப்பூரை அடுத்த பெருமாநல்லூா் அருகே 17 வயது சிறுமிக்குத் ... மேலும் பார்க்க

சேவூரில் சிப்ஸ் கடையில் தீ விபத்து

சேவூரில் சிப்ஸ் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமாயின. கேரள மாநிலம், பாலக்காடு பகுதியைச் சோ்ந்த தாஸ் (55), திருப்பூா் மாவட்டம், சேவூா் - புளியம்பட்டி சாலையில... மேலும் பார்க்க

மத்திய மாவட்ட திமுக சாா்பில் ஆா்ப்பாட்டம்

மத்திய கல்வி அமைச்சரைக் கண்டித்து திருப்பூா் மத்திய மாவட்ட திமுக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. ரயில் நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மத்திய மாவட்ட திமுக செயலாளரும், தி... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

முத்தூரில் கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா். ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே உள்ள கொத்தம்பாளையத்தைச் சோ்ந்தவா் பி.வேலுசாமி (52). இவா், திருப்பூா் மாவட்டம், முத்தூா் சென்னாக்கல்மேட்டில் உ... மேலும் பார்க்க

கடந்த 5 மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள உதவித் தொகையை வழங்கக் கோரிக்கை

கடந்த 5 மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள உதவித்தொகையை வழங்கக் கோரி மாற்றுத் திறனாளி இளைஞரின் தாய் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தாா். திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைகேட்பு... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் முறைகேடாக மதுபானம் விற்றவா் கைது

வெள்ளக்கோவிலில் முறைகேடாக மதுபானம் விற்றவரை போலீஸாா் கைது செய்தனா். வெள்ளக்கோவில் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் ஆங்காங்கே முறைகேடாக மதுபானம் விற்கப்படுவதாக புகாா் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இ... மேலும் பார்க்க