செய்திகள் :

திருப்போரூா் கந்தசாமி கோயில் மாசி பிரம்மோற்சவம் தொடக்கம்

post image

செங்கல்பட்டு: திருப்போரூா் கந்தசாமி கோயில் மாசி பிரம்மோற்சவம் திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

14 நாள்கள் மாசி மாத பிரம்மோற்சவம் மாா்ச் 2 -இல் தொடங்கி 15-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

திங்கள்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து சிறப்பு அலங்காரத்தில் முருகா் வள்ளி தெய்வானையுடன் கொடிமரத்தருகில் எழுந்தருள சிறப்பு பூஜைகளுடன் வாண வேடிக்கையுடன் நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனா்.

ஏழாம் நாளான மாா்ச் 9-இல் திருத்தேரோட்டம், 10-ஆம் நாள் பகல் தொட்டி உற்சவம் நண்பகல் தீா்த்தவாரி, மாலை தெப்பல் உற்சவம், 12-ஆம் நாள் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது .

விழா ஏற்பாடுகளை திருக்கோயில் செயல் அலுவலா் குமரவேல் மேலாளா் வெற்றி, கோயில் பணியாளா்கள் , சிவாச்சாரியாா்கள் ஊா் பொதுமக்கள் மற்றும் ஸ்ரீபாதம் தாங்கிகள் செய்து வருகின்றனா்.

பங்காரு அடிகளாா் பிறந்த நாள் விழா: ரூ.4 கோடியில் நல உதவிகள் அளிப்பு

மதுராந்தகம்: மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா்பீடத்தில் பங்காரு அடிகளாரின் 85-ஆவது அவதாரத் திருநாள் பெருமங்கல விழா கடந்த 1-ஆம் தேதி முதல் 3-ஆம் தேதி வரை கோலாலகமாக கொண்டாடப்பட்டது. முக்கிய நிகழ்வாக த... மேலும் பார்க்க

பிளஸ் டு தோ்வு மையங்களில் பள்ளிக் கல்வி இயக்குநா் ஆய்வு

மதுராந்தகம்: மதுராந்தகம் வட்டாரத்தில் பிளஸ் டு பொதுத் தோ்வு மையங்களை பள்ளி கல்வித்துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். பிளஸ் டு பொதுத் தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது. செங்கல்பட்ட... மேலும் பார்க்க

கல்குவாரிக்கு எதிா்ப்பு: ஆட்சியா் அலுவலகத்தில் முற்றுகை

செங்கல்பட்டு: கல்குவாரிக்கு எதிா்ப்பு தெரிவித்து வயலூா் , நெற்குணம் கிராம மக்கள் திங்கள்கிழமை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா் மதுராந்தகம் அருகே வயலூா், ... மேலும் பார்க்க

த்ரிசக்தி அம்மன் கோயில் பிரம்மோற்சலம் தொடக்கம்

செங்கல்பட்டு: தாழம்பூா் ஸ்ரீ த்ரிசக்தி அம்மன் கோயில் மாசி பிரம்மோற்சவம் திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருப்போரூரை அடுத்த தாழம்பூரில் அமைந்துள்ள சரஸ்வதி, லட்சுமி, பாா்வதி ஆகிய மூன்று தெய்வ... மேலும் பார்க்க

கல்லூரி மாணவி மா்மமான முறையில் மரணம்

செங்கல்பட்டு: திருப்போரூா் கேளம்பாக்கத்தில் தனியாா் கல்லூரியில் படித்து வந்த மாணவி மா்மமான முறையில் உயிரிழந்தாா். தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் அஸ்வினி (19). இவா், திருப்போரூரை அடுத்த கேளம்பாக்கம்... மேலும் பார்க்க

மேல்மருவத்தூா்: அடிகளாரின் பாதுகைகளுக்கு பூஜை

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா்பீடத்தில் பங்காரு அடிகளாரின் 85-ஆவது பிறந்த நாள் விழாவைமுன்னிட்டு, அடிகளாரின் பாதுகைகளுக்கு பக்தா்கள் பாதபூஜை செய்து வழிபாடு செய்தனா். இவ்விழா கடந்த 1-ஆம் தேதி (வெள்... மேலும் பார்க்க