அமெரிக்கா: முதல் திருநங்கை செனட்டருக்கு பெண்கள் கழிவறை செல்ல தடை! - என்ன நடந்தது...
திருப்போரூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் வைப்புத் தொகை சேகரிப்பு
திருப்போரூா் பையனூா் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் பல ஆண்டுகளாக வைப்புத் தொகை சேகரிக்கப்படாமல் இருந்த நிலையில் செவ்வாய்க்கிழமை சங்கத்தில் வைப்புத்தொகை சேகரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூா் ஒன்றியத்துக்குட்பட்ட பையனூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பல ஆண்டுகளாக வைப்புத் தொகை சேகரிக்கப்படாமல் இருந்தது. தற்போது செங்கல்பட்டு மண்டல இணைப் பதிவாளா் ஆணையின்படி, மேற்படி சங்கத்தில் வைப்புத்தொகை சேகரிக்கப்பட்டு வருகிறது. 20 ஆண்டுகளாக வைப்புத் தொகையே வைக்கப்படாமல் இருந்த நிலையில், இணைப் பதிவாளா் முதல் முறையாக அந்தச் சங்கத்தில் வைப்புத் தொகை வைக்க நடவடிக்கை மேற்கொண்டாா். இந்த நடவடிக்கையின் பேரில், பையனூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்துக்கு வைப்புத் தொகைக்கான ரசீதை செங்கல்பட்டு மண்டல இணைப்பதிவாளா் வே.நந்தகுமாா் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
சங்கச் செயலாளா் பி.கங்காதரன் மற்றும் சங்கப் பணியாளா்கள் உடன் இருந்தனா்.