செய்திகள் :

திருமண ஆசை காட்டி கிரிப்டோகரன்சி மோசடி; தேனி இளைஞரிடம் 88 லட்சம் பறித்த கும்பல் கைது - நடந்தது என்ன?

post image

தேனியைச் சேர்ந்த இளைஞரிடம் திருமண ஆசைகாட்டி கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்யக் கூறி 88.58 லட்ச ரூபாயை மோசடி செய்த 4 பேரை தேனி சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்துள்ளனர். மோசடியில் ஈடுபட்டவர்கள் 2 கூலித்தொழிலாளி பெண்களின் வங்கிக் கணக்கை பெற்று, பணத்தை பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கைதான நந்தகோபால், யுவராஜ்

இது குறித்து தேனி சைபர் க்ரைம் போலீஸாரிடம் விசாரித்தோம். ``தேனி ஆலை உரிமையாளர் மகனுக்கு திருமண வரன் தேடி வந்துள்ளனர். அவர்கள் திருமண வரன் தேடும் செயலியில் தங்கள் விவரங்களை பதிவு செய்துள்ளனர். அதில் ஸ்ரீ ஹிரிணி என்ற ஐடியில் இருந்து ஒரு பொருத்தம் கிடைத்துள்ளது. இதையடுத்து அந்த ஐடியை தொடர்பு கொண்டு பேசி, பிறகு வாட்ஸ்-அப்பில் பழகியுள்ளனர். ஸ்ரீ ஹிரிணி என்ற ஐடியில் பேசியவர், விரைவில் திருமண ஏற்பாடுகளை செய்யலாம், முன்னதாக தான் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்து நல்ல லாபம் ஈட்டியுள்ளதாகக் கூறி இளைஞரையும் முதலீடு செய்ய வற்புறுத்தியுள்ளார். இதனால் 88.58 லட்ச ரூபாயை இளைஞர் கொடுத்துள்ளார். பிறகு அந்த ஐடியில் பேசியவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து புகார் அளித்தார்.

அதனடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், பாதிக்கப்பட்ட இளைஞர் இரண்டு வங்கிக் கணக்குகளில் பணம் செலுத்தியிருக்கிறார். கூலித்தொழிலாளர்களான 2 பெண்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் கமிஷன் கொடுத்து அவர்கள் மூலமாக வங்கி கணக்கு தொடங்கியுள்ளனர். முதலில் இவர்களை ஏமாற்றிய, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த நந்தகோபால் என்பரை பிடித்தோம்.

கைதான பத்மநாபன், சிவா

மேலும் இந்த மோசடியில் தொடர்புடைய யுவராஜ், பத்மநாபன், சிவா ஆகியோரையும் பிடித்தோம். அப்போதுதான் இவர்கள் டெலிகிராம் மூலம் கம்போடியா சைபர் க்ரைம் குற்றவாளிகளுடன் தொடர்பில் இருப்பது தெரியவந்தது. அவர்களை கைது செய்து, 3.90 லட்ச ரூபாய் ரொக்கம், 6 போன்கள், 29 டெபிட் கார்டுகள், 18 காசோலை வில்லைகள், 12 வங்கிக் கணக்குகள், 46 சிம் கார்டுகளை, வங்கி கணக்குகள் பற்றி எழுதப்பட்ட 2 டைரிகளை பறிமுதல் செய்துள்ளோம்" என்றனர்.

``காதலனை திருமணம் செய்ய தடையாக இருந்தது, அதனால்..'' - 3 குழந்தைகளை கொன்ற தாய் பகீர் வாக்குமூலம்

பள்ளியில் ஒன்றாக படித்த நண்பர்களை திடீரென சந்தித்துக்கொண்டால் மகிழ்ச்சிக்கு அளவே இல்லாமல் இருக்கும். ஆனால் ஆந்திராவில் பள்ளியில் படித்த நண்பனை சந்தித்ததால் ஒரு பெண் தனது மூன்று குழந்தைகளை கொடூரமாக கொல... மேலும் பார்க்க

மருதமலை : நாளை கும்பாபிஷேகம்; நேற்று வெள்ளி வேல் திருட்டு - சாமியார் வேட ஆசாமியை தேடும் போலீஸ்

கோவை மாவட்டம், மருதமலையில் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இது தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளுக்கு இணையாக பிரபலமான கோயிலாகும். பக்தர்கள் இந்த கோயிலை முருகனின் ஏழாவது படை வீடு என்றும் அழைப்பார்... மேலும் பார்க்க

50 வயதில் 10-ம் வகுப்பு தேர்வு; தாய்க்கு பதில் தேர்வு எழுதிய 28 வயது மகள் கைது!

தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 28-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. தமிழ் தேர்வு முடிந்த நிலையில் நேற்று ஆங்கில பாடத் தேர்வு நடைபெற்றது. இதே போல் நாகை மாவட்டத்தில் மாணவர்கள் மற்றும்... மேலும் பார்க்க

ரூ.2 கோடி மதிப்பிலான ஹைபிரிட் கஞ்சா; சிக்கிய துணை நடிகை - 3 மாதம் காத்திருந்து தட்டித்தூக்கிய போலீஸ்

கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்தவர் கிறிஸ்டினா என்ற தஸ்லிமா சுல்தான்(41). இவர் தமிழ்நாட்டின் திருவள்ளூர் உலகநாதபுரத்தில் வசித்துவந்தார். கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்தவர் பிறோஸ்(26). தஸ்லிமாவும், பிற... மேலும் பார்க்க

குடிபோதை: காசு கேட்டு தகராறு; அக்கா மகனை அடித்து கொன்ற இளைஞர்.. போதை தெளிந்ததும் தூக்கிட்டு மரணம்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கீழவடகரை அழகர்சாமிபுரம் பகுதியைச் சேர்ந்த செல்லத்துரை மனைவி ஆனந்தி. இவர்களுக்கு நிசாந்த் என்ற 14 வயது மகனும், 8 வயதில் ஒரு மகள் 3 ஆம் வகுப்பு படித்துவந்தார். நிஷாந்த் 8 ... மேலும் பார்க்க

பணத்தகராறு… பெற்ற தந்தையை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த மகன் - நெல்லையில் பயங்கரம்!

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை அருகில் உள்ள சிவந்திபட்டியைச் சேர்ந்தவர் பூலையா. இவருக்கும், இவருடைய மகன் கணேசனுக்கும் சொத்துத் தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில், பூலையா கடந்த 20 நாட்களுக்கு முன்பு ... மேலும் பார்க்க