செய்திகள் :

திருமண மீறிய உறவு; பேசாமல் தவிர்த்த இளம்பெண்ணை கொலை செய்த இளைஞர் - திருச்சி அதிர்ச்சி சம்பவம்

post image

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த சிட்கோ வளாகத்தில் கழனிவாசல்பட்டியைச் சேர்ந்த சுகன்யா (30) என்ற இளம்பெண் கழுத்து நெரிக்கப்பட்டு, மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். இவர் ஏற்கனவே திருமணம் ஆகி பின் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக மணப்பாறை காவல் நிலைய போலீஸார் கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் சுகன்யாவை கொலை செய்தது கஸ்பா பொய்கைப்பட்டியைச் சேர்ந்த தினேஷ் (28) என்பது தெரியவந்தது. தினேஷும் திருமணமானவர்.

அவர் தலைமறைவான நிலையில் அவரை கைது செய்யும் பணியில் போலீஸார் தீவிரம் காட்டினர். இதையடுத்து, தலைமறைவாக இருந்த இடம் குறித்து அறிந்த போலீஸார் அங்கு வைத்து தினேஷ் கைது செய்யப்பட்டார். அவரிடம் கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தியபோது, சுகன்யாவுக்கும், தினேஷுக்கும் இடையே திருமணம் மீறிய உறவு இருந்த நிலையில், சமீபத்தில் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால், கடந்த 15 நாட்களுக்கும் மேலாக சுகன்யா செங்கல்பட்டில் தங்கி தினேஷுடன் பேசாமல் இருந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த தினேஷ் செங்கல்பட்டிற்கு சென்று சுகன்யாவை மணப்பாறைக்கு அழைத்து வந்துள்ளார்.

dinesh

இருப்பினும், 'உன்னை எனக்குப் பிடிக்கவில்லை' என்று சுகன்யா கூறி தினேஷிடம் பேச மறுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மோட்டார் சைக்கிளில் திருச்சியில் விட்டு விடுவதாக சுகன்யாவை அழைத்துக் கொண்டு தினேஷ் சென்றுள்ளார். சிட்கோ அருகே சென்ற போது வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த தினேஷ் சுகன்யாவை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தப்பிச் சென்றது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, அவரை சிறையில் அடைத்துள்ளனர். திருமணம் மீறிய உறவில் இருந்த இளம்பெண்ணை இளைஞர் ஒருவர் கொலை செய்து கைதாகியுள்ள சம்பவம், மணப்பாறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

காதலிக்காக மனைவிக்கு விவாகரத்து: சொத்துடன் வராததால் காதலனை கொடூரமாக அடித்து தெருவில் போட்ட காதலி..

மும்பை தாதரில் வசிப்பவர் ரஞ்சித் தேஷ்முக் (48). ரியல் எஸ்டேட் ஏஜெண்டாக வேலை செய்து வருகிறார். அதோடு அரசு நிறுவனம் ஒன்றில் பாய்லர் ஆப்ரேட்டராகவும் இருக்கிறார். இவருக்கு ஷில்பா(51) என்ற பெண்ணுடன் தொடர்ப... மேலும் பார்க்க

3 வயது ஆண் குழந்தை; 12 லட்சத்திற்கு விற்க முயற்சி; 3 பெண்கள் கைது - பின்னணி என்ன?

சென்னையை சேர்ந்த கார்த்திக் என்பவரிடம் பெண் ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டு குழந்தை ஒன்று விற்பனைக்கு உள்ளது என்றும், ரூ.12 லட்சம் கொடுத்தால் குழந்தையை பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறியிருக்கிறார். இதன... மேலும் பார்க்க

கும்மிடிப்பூண்டி: சிறுமி பாலியல் வன்கொடுமை; வடமாநில நபர் கைது - குற்றவாளியை உறுதிபடுத்தியது எப்படி?

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 4-ம் வகுப்பு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட வழக்கில் சந்தேகப்படும் நபரை நேற்று (ஜூலை 25) கைது செய்துள்ளது காவல்துறை. ஜூலை மாதம் 12-ம் தேதி, பள்ளிக்குச் செ... மேலும் பார்க்க

``பேரல்களை அடுக்கி, சுவர் ஏறி குதித்தேன்" - கண்ணூர் சிறையிலிருந்து தப்பிய கோவிந்தசாமி சொல்வது என்ன?

கேரள மாநிலம், கொச்சியில் இருந்து சொர்ணூர் சென்ற ரயிலில் 2011-ம் ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி பயணித்தார் தனியார் நிறுவன ஊழியரான செளமியா(23). அதே ரயிலில் பயணித்த தமிழ்நாட்டின் விருத்தாச்சலத்தைச் சேர்ந்த கோவ... மேலும் பார்க்க

சென்னை: திருமணமான பெண்ணுடன் குடும்பம் நடத்திய வடமாநில இளைஞர் - கொலையில் முடிந்த கூடா நட்பு!

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்தவர் கணேசமூர்த்தி (47). இலரின் மனைவி சரசு (38). இந்தத் தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் சற்று மூளை வளர்ச்சி குன்றியவர். கணேசமூர... மேலும் பார்க்க

சாத்தான்குளம் லாக்கப் டெத்: அப்ரூவராக மாற விரும்பும் ஸ்ரீதர்; எதிர்க்கும் சிபிஐ.. பின்னணி என்ன?

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் அப்ரூவராக மாற விருப்பம் தெரிவித்த பணி நீக்கம் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மனுச்செய்துள்ள நிலையில், அதை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று சிபிஐ தரப்பில் எதிர்ப்பு ... மேலும் பார்க்க