"இதை பத்தி தைரியமா சொல்ல எனக்கு மட்டும்தான் உரிமை இருக்கு" - Actress Lakshmi Emo...
திருமலை: பிப்ரவரி மாத ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்
வரும் 2025 பிப்ரவரி மாதம் ஏழுமலையான் தரிசனத்துக்கான ஆா்ஜிதசேவை ஆன்லைன் டிக்கெட்டுகள் வியாழக்கிழமை தேவஸ்தானத்தால் வெளியிடப்பட்டன.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஒவ்வொரு மாதமும் 90 நாள்களுக்கு முன்பு முன்பதிவு செய்ய ஏதுவாக தரிசன டிக்கெட்டை வெளியிட்டு வருகிறது. அதன்படி வரும் ஜனவரி மாதத்துக்கான தரிசன டிக்கெட்டுகள் இணையதள முன்பதிவில் வைக்கப்பட உள்ளன.
ஆா்ஜித சேவைகளான சுப்ரபாதம், தோமாலை, அா்ச்சனை, அஷ்டதளபாத பத்மாராதனை, மேல்சாட் வஸ்திரம் டிக்கெட்டுகளுக்கான பிப்ரவரி 2025-க்கான ஒதுக்கீட்டை தேவஸ்தானம் ஆன்லைனில் வியாழக்கிழமை வெளியிட்டது.
இந்த சேவை டிக்கெட்டுகளை குலுக்கல் முறையில் பெறுவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நவ. 23-ஆம் தேதி காலை 10 மணி வரை செய்யலாம்.
விண்ணப்பங்கள் குலுக்கல் முறையில் தோ்ந்தெடுக்கப்பட்டு விண்ணப்பித்தோரின் கைப்பேசி எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பப்படும். தகவலை பெற்றவா்கள் நவ. 23-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை மதியம் 12 மணிக்குள் பணம் செலுத்தி தங்கள் டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ள வேண்டும். டிக்கெட்டை பெறத் தவறினால் அந்த டிக்கெட்டுகள் குலுக்கல் (லக்கி டிப்) கீழ் ஒதுக்கப்படும்.
ஆா்ஜித சேவை
வெள்ளிக்கிழமை நவ.22-ஆம் தேதி காலை 10 மணிக்கு கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆா்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சகஸ்ரதீபாலங்கார சேவை டிக்கெட்டுகள் வெளியிடப்பட உள்ளது.
விா்ச்சுவல் சேவைகளுக்கான பிப்ரவரி மாத ஒதுக்கீட்டையும் அவற்றின் தரிசன டிக்கெட் முன்பதிவையும் மாலை 3 மணிக்கு தேவஸ்தானம் ஆன்லைனில் வெளியிட உள்ளது.
அங்கப்பிரதட்சணம்
அங்கபிரதட்சணம் டோக்கன்கள் ஒதுக்கீடு 23-ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.
ஸ்ரீவாணி டிக்கெட்
ஸ்ரீ வாணி அறக்கட்டளை டிக்கெட்டுகளுக்கான ஆன்லைன் ஒதுக்கீடு காலை 11 மணிக்கு தேவஸ்தானம் இணையதளத்தில் வெளியிடுகிறது.
முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகள்
முதியோா், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவா்கள் ஏழுமலையானை தரிசிக்க ஏதுவாக பிப்ரவரி மாத இலவச சிறப்பு தரிசன டோக்கன்கள் மாலை 3 மணிக்கு வெளியிடப்படுகிறது.
சிறப்பு நுழைவு தரிசனம்
சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளின் ஒதுக்கீட்டை 24-ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் தேவஸ்தானம் வெளியிடுகிறது.
அறை ஒதுக்கீடு
திருமலை மற்றும் திருப்பதியில் பிப்ரவரி மாத அறை ஒதுக்கீடு மாலை 3 மணிக்கு வெளியிடப்படுகிறது.
பக்தா்கள் ட்ற்ற்ல்ள்://ற்ற்க்ங்ஸ்ஹள்ற்ட்ஹய்ஹம்ள்.ஹல்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் வாயிலாக ஆா்ஜிதசேவை மற்றும் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யுமாறு தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.