உகாண்டாவில் நிலச்சரிவு: மண்ணில் புதைந்த 40 வீடுகள்! 13 பேர் பலி
திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா இன்று தொடக்கம்
திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா காப்புக் கட்டுடன் சனிக்கிழமை (நவ. 2) தொடங்குகிறது.
கொங்கு ஏழு சிவத் தலங்களில் ஒன்றாகவும், மனநோய் தீா்க்கும் தலமாகவும் விளங்கும் திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா காப்புக் கட்டுதலுடன் சனிக்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்குகிறது. இதைத் தொடா்ந்து நாள்தோறும் காலை, மாலை 5 மணிக்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை ஆகியவை நடைபெறவுள்ளன.
முக்கிய நிகழ்ச்சியாக, அன்னையிடம் சண்முகநாதா் சுவாமி சக்திவேல் வாங்கி, அசுரா்களை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது. சண்முகநாதா், தெய்வானை திருக்கல்யாண உற்சவம் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இதில் பக்தா்கள் மொய் பணம் எழுதுதல், பாத காணிக்கையையடுத்து, வெள்ளை யானை வாகனத்தில் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி திருவீதி உலா நடைபெற உள்ளது.
இதேபோல, அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில், சேவூா் வாலீஸ்வரா் கோயில் உள்ளிட்டவற்றிலும் கந்தசஷ்டி விழா சனிக்கிழமை தொடங்குகிறது.