உள்கட்டமைப்பு திட்டங்களின் தடைகளுக்கு தீர்வாக ‘பிரகதி இணையதளம்’!
திருவண்ணாமலையில் மண் சரிவு: 6 உடல்கள் மீட்பு.!
ஃபென்ஜால் புயல் காரணமாக சனிக்கிழமை காலை முதல் திருவண்ணாமலை மாவட்டத்தில் மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமையைக் கடந்தும் பெய்தபடியே இருந்தது. இதனால் சாலைகள், கால்வாய்கள், குளங்கள், ஏரிகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்தது.
இதனிடையே, திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றும் மலைஅடிவாரத்தில் உள்ள வ.உ.சி. நகா், 11-ஆவது தெருவில் ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென மண் சரிவு ஏற்பட்டது.
தகவலறிந்த போலீஸாா், தீயணைப்புத் துறையினா் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். இதையடுத்து, முதல்கட்டமாக மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் இருந்த சுமாா் 200 போ் மீட்கப்பட்டு, நகராட்சிப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டனா்.
அரக்கோணத்தை அடுத்த தக்கோலத்தில் இருந்தும், சென்னையில் இருந்தும் தேசிய பேரிடா் மீட்புப் படையினா் திருவண்ணாமலைக்கு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட மண் சரிவில், 7 போ் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. மலையில் வீடு கட்டி வாழ்ந்து வந்த ராஜ்குமார், அவரது மனைவி மீனா, மகன் கௌதம், உறவினர்கள் மகா, தேவிகா, விநோதினி உள்பட 7 பேரின் நிலை என்னவானது என்று தெரியாத நிலையில், மீட்புப்பணி தொடர்ந்து நடைபெறுகிறது.
இந்த நிலையில், மாலை 7.30 மணி நிலவரப்படி 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன. மீட்புப்பணி தொடர்ந்து நடைபெறுகிறது...