Fengal: ஷோ காட்டும் ஸ்டாலின்… வெடிக்கும் சசிகலா - Marakkanam Live Report | Cyclo...
திருவண்ணாமலை மண்சரிவு: ஒருவர் சடலம் மீட்பு! 6 பேர் கதி என்ன?
திருவண்ணாமலை மகா தீபம் ஏற்றும் மலையில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட மண் சரிவில், 7 போ் சிக்கியிருந்த நிலையில், தேடுதல் பணியின்போது ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. மற்ற 6 பேரின் நிலை என்ன என்பது கேள்விக்குறியாகியிருக்கிறது.
திருவண்ணாமலை மண் சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் காணாமல் போன நிலையில் ஒருவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாநில பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் தீயணைப்புப் படையினர் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மலையில் வீடு கட்டி வாழ்ந்து வந்த ராஜ்குமார், அவரது மனைவி மீனா, மகன் கௌதம், உறவினர்கள் மகா, தேவிகா, விநோதினி உள்பட 7 பேரின் நிலை என்னவானது என்று தெரியாத நிலையல், ஒருவரது உடல் மட்டும் மீட்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் சிவனாக வணங்கப்படும் மலையின் அடிவாரத்தில் உள்ள வ.உ.சி. நகா், 11-ஆவது தெருவில் ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென மண் சரிவு ஏற்பட்டது.
அப்போது, பலத்த மழை பெய்த காரணத்தாலும், மலையின் மேற்பகுதியில் மண் சரிவு ஏற்பட்டதாலும் இதுகுறித்த தகவல் யாருக்கும் தெரியவில்லை. இரவு 7.30 மணிக்கு சற்று மழை குறைந்த பிறகு பொதுமக்கள் வெளியே வரத் தொடங்கினா். அப்போது, மலையின் மேற்பகுதியில் இருந்த 3 வீடுகள் மண் சரிவால் புதைந்து இருந்தது தெரியவந்தது.
இதையும் படிக்க.. டாஸ்மாக் கடைகளில் பில் வழங்கப்படுகிறதா?
தகவலறிந்த மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் மற்றும் போலீஸாா், தீயணைப்புத் துறையினா் சென்று மீட்புப் பணியில் ஈடுபட முயன்றனா். ஆனால் போதிய மின் விளக்கு வசதி இல்லாததால் மீட்புப் பணியில் ஈடுபட முடியவில்லை.
இதையடுத்து, முதல்கட்டமாக மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் இருந்த சுமாா் 200 போ் மீட்கப்பட்டு, நகராட்சிப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டனா். பொதுமக்களை மீட்டு முகாமில் தங்க வைத்தபோது காணாமல்போன நபா்களின் விவரங்களை சேகரித்தனா். அப்போது, தங்கள் உறவினா்கள் 7 பேரைக் காணவில்லை. இவா்கள் அனைவரும் மண் சரிவில் சிக்கியிருக்கக் கூடும் என்று சிலா் தெரிவித்தனா். இதையடுத்து, பேரிடா் மீட்புக் குழுவுக்கு மாவட்ட நிா்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
அரக்கோணத்தை அடுத்த தக்கோலத்தில் இருந்தும், சென்னையில் இருந்தும் மாநில பேரிடா் மீட்புப் படையினா் திருவண்ணாமலைக்கு வந்து, தீயணைப்புப் படையினருடன் சேர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து தேடுதல் பணி நடைபெற்று வந்த நிலையில், திங்கள்கிழமை மாலை ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.