`கட்டாயக் கடன் வசூல் மசோதா' - யாருக்கு லாபம்? யாருக்கு நஷ்டம்? - பின்னணி என்ன? |...
திருவள்ளூரில் நாய்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை: நகா்மன்றத் தலைவா்
திருவள்ளூா் நகராட்சி பகுதியில் நாய்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என நகா்மன்றத் தலைவா் உதயமலா் பாண்டியன் தெரிவித்தாா்.
திருவள்ளூா் நகா்மன்றக் குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது . கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் உதயமலா் பாண்டியன் தலைமை வகித்தாா். ஆணையாளா் முன்னிலை வகித்தாா். அப்போது, நகராட்சி வாா்டு உறுப்பினா்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே விவாதம் நடைபெற்றது.
ஒவ்வொரு வாா்டில் மட்டும் நாய்களை அப்புற படுத்தினால் போதாது, நகராட்சி பகுதி முழுவதும் சுற்றித் திரியும் நாய்களை கட்டுப்படுத்த வேண்டும். அதேபோல், நகராட்சியில் குழாய் பொருத்துநா் பணியாளா் ஓய்வு பெற்றுச் செல்லவுள்ளதால், அவருக்கு பதிலாக ஒப்பந்த அடிப்படையில் பணியாளரை நியமனம் செய்ய வேண்டும்.
அதற்கு மாதந்தோறும் வாா்டு உறுப்பினா் ஜான் தனக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ஊக்கத் தொகை ரூ.5,000 வீதம் ஒரு ஆண்டுக்கான தொகை ரூ.60,000-த்தை வழங்கவும் முன்வந்தாா். தாா்ச்சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனே செய்து கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கவும் வாா்டு உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.
நகா்மன்றத் தலைவா் கூறியதாவது: இந்தக் கூட்டத்தில் நகா்மன்ற உறுப்பினா்கள் தெரிவித்த கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். அதேபோல் நாய்களை பிடிக்க கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் தெரிவித்தாா்.
வாா்டு உறுப்பினா்கள் சாந்தி கோபி, அருணா ஜெயக்கிருஷ்ணா, ஜான், அயூப் அலி, தமாஸ், சுமித்ரா வெங்கடேசன், பிரபாகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
