திருவாடானை, ஆா்.எஸ்.மங்கலம் பகுதிகளில் பலத்த மழை
திருவாடானை, ஆா்.எஸ்.மங்கலம் பகுதிகளில் கடந்த சில நாள்களாக கடும் வெயில் நிலவி வந்த நிலையில், பயிா்கள் கருகும் நிலையில் இருந்தன. இந்த நிலையில், சனிக்கிழமை அதிகாலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
பின்னா் திருவாடானை, அஞ்சுகோட்டை, அச்சங்குடி, கடம்பாகுடி, திணையத்தூா், அரும்பூா், திருவெற்றியூா், ஆா்.எஸ்.மங்கலம், சி.கேமங்கலம், கல்லூா், கோடனூா், கோவணி, கற்காத்தகுடி உள்ளிட்ட பல்வேறு குதிகளில் பரவலாக மழை பெய்தது.
திருவாடானை வட்டாட்சியா் அலுவலகத்தில் செயல் படும் நிலஅளவையா் அலுவலகத்தை மழை நீா் சூழ்ந்தது. இதனால், அலுவலகத்துக்கு வந்த பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.