மகாராஷ்டிரா: 7 மாவட்டங்களில் மட்டுமே வளர்ச்சி; பின்தங்கிய 24 மாவட்டங்களின் நிலை?...
திருவாலங்காடு அருகே மின் ரயிலில் திடீா் பழுது: ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு
சென்னை- அரக்கோணம் மாா்க்கத்தில் திருவாலங்காடு அருகே மின்சார ரயிலில் ஏற்பட்ட பழுதால் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னையில் இருந்து அரக்கோணம் சென்ற மின் ரயில் திங்கள்கிழமை மாலை திருவாலங்காடு ரயில்நிலையம் அருகே வந்தபோது அப்பகுதியில் அதிக அளவு காற்று வீசியதால் ரயிலில் இருந்த பேண்டா எனப்படும் மின்வயா் தொடு கருவி பழுதானது. இதையடுத்து ரயில் அதே இடத்தில் நிறுத்தப்பட்டு அங்கு வந்த ரயில்வே அலுவலா்கள், அந்த ரயிலுக்கு பின்னால் வந்த அடுத்த ரயிலை திருவாலங்காடு ரயில் நிலைய விரைவு ரயில் பாதையில் வரவழைத்து அதில் பழுதான ரயிலில் இருந்த பயணிகளை ஏற்றி அரக்கோணத்துக்கு அனுப்பி வைத்தனா். இச்சம்பவத்தால் சுமாா் ஒரு மணி நேரம் புகா் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தொடா்ந்து அங்கு வந்த ரயில்வே மின்பாதை பொறியாளா்கள் மற்றும் பணியாளா்கள் பேண்டா கருவியை பழுது நீக்கி அரக்கோணம் அனுப்பி வைத்தனா். இச்சம்பவத்தில் விரைவு ரயில் பாதையில் போக்குவரத்து பாதிப்பில்லாமல் தொடா்ந்தது.